சேவை செய்ய முடியாவிட்டாலும்...
ஒரு காலத்தில், தூர் தர்ஷனில் ஒளிபரப்பிய மகாபாரத சீரியலில், கிருஷ்ணனாக நடித்தவர் நிதீஷ் பரத்வாஜ்; இவர் கால் நடை மருத்துவர் ஆக இருந்த போதும், மராத்தி நாடகங்களை இயக்கி, நடித்துக் கொண்டிருந்தார். 'டிவி'யில், மகாபாரத சீரியலில் கண்ணனாக நடித்த போது, பேரும், புகழும் அடைந்தார். அதை கண்ட பா.ஜ., கட்சி, அவரை தேர்தலில் ஜெயிக்க வைத்து, எம்.பி., ஆக்கியது. 'எம்.பி., ஆனபோது, மிகவும் சந்தோஷப்பட்டேன்; ஆனால், ஏழை, எளிய மக்களுக்கு நல்லது செய்ய முயன்றும், நடக்கவில்லை. அதனால், பதவி மீது இருந்த மோகம் தணிந்தது. தற்போது, தேர்தலில் போட்டியிடா விட்டாலும், கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்...' என்கிறார் இந்த மாஜி, 'டிவி' கண்ணன். முதல் மனைவி மோனிஷாவை பிரிந்து, இப்போது, இரண்டாவது மனைவி ஸ்மிதாவுடன் இருக்கிறார்.— ஜோல்னா பையன்.