இதப்படிங்க முதல்ல....
உண்மைக் கதைகளில் விஜயசேதுபதி!பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் சூது கவ்வும் போன்ற படங்களில் நடித்து, 'ஹிட்' கொடுத்தவர் விஜயசேதுபதி. தற்போது, அவரது கவனம், உண்மைச் சம்பவங்களை படமாக்குவதில் திரும்பியுள்ளது. அதனால், தமிழகத்தின் கிராமப்புறங்களில் நடைபெற்ற சில கதைகளை, சேகரித்துள்ள விஜயசேதுபதி, சங்கு தேவன் என்ற படத்திற்காக, திண்டுக்கல் பகுதியில் நடந்த உண்மைக் கதையை தேர்வு செய்து, நடித்து வருகிறார். அதோடு, இப்படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையிலும், முதன் முறையாக தயாரிக்கிறார் விஜயசேதுபதி.— சினிமா பொன்னையாபாட்டி சொல்லைத் தட்டாத ப்ரியா ஆன்ந்த்!எதிர்நீச்சல் படத்தில் நடித்த ப்ரியா ஆனந்தின் கைவசம், தற்போது நான்கு படங்கள் உள்ளன. இருப்பினும், அது, அனைத்துமே வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்கள் தான். அதனால், அடுத்து பிகினி நடிகையாக உருவெடுத்து, மேல்தட்டு ஹீரோக்களை எட்டிப் பார்க்க திட்டமிட்டார். ஆனால், அதற்கு சென்னையிலுள்ள ப்ரியாவின் பாட்டி, எதிர்ப்பு தெரிவித்து விட்டார். எனவே, பிகினி உடையில் தான் எடுத்த ஆல்பத்தை, கோடம்பாக்கத்தில் சுற்றலில் விட்டிருந்த ப்ரியா ஆனந்த், அவசர அவசரமாக, ஆல்பத்தை கைப்பற்றி, தன் கஸ்டடியில் வைத்து விட்டார். இட்டப்படியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!— எலீசா'ஹிட்' பட டைரக்டர்களின் காது கடிக்கும் நயன்தாரா!இரண்டாவது ரவுண்டிலும், இளவட்ட ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நயன்தாரா, ஏற்கனவே, தன்னை வைத்து ஹிட் படங்கள் கொடுத்த டைரக்டர்களை சந்தித்து, சான்ஸ் கேட்டு வருகிறார். அப்போது, அவர்களிடத்தில், 'பழைய ஞாபகத்தில், மீண்டும் என்னை கிளாமர் ஹீரோயினாக சித்திரித்து விடாதீர்கள். இப்போது, நான் பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட்...' என்று, காது கடித்து விடுகிறார் நயன்தாரா. ஆனபோதும், நயன்தாராவை, ஐயா படத்தில் தமிழுக்கு அறிமுகம் செய்த டைரக்டர் ஹரி மட்டும், மீண்டும் அவரை ஹோம்லியாக நடிக்க வைக்க, உத்தரவாதம் கொடுத்துள்ளார். இருக்கிற அளவோடு இருந்தால், எல்லாம் தேடி வரும்.— எலீசா ஹாலிவுட் படத்தில் மாதவன்!மணிரத்னத்தின், அலைபாயுதே படத்தில் அறிமுகமானவர் மாதவன். அதன் பின், தமிழில் பெரிய ரவுண்டு வந்தவர், பின் பாலிவுட் சினிமாவுக்கு சென்று, த்ரி இடியட்ஸ் உட்பட, சில இந்தி படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில், தற்போது, நைட் ஆப் தி லிவிங்டெத் என்றொரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார். இதில், நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கும் மாதவன், தன் உடல் எடையை குறைத்து, ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக, தன் பாடி லாங்குவேஜையும் மாற்றியுள்ளார்.— சி. பொ.,தொப்பை வைத்த ஜெயம் ரவி!இரண்டு ஆண்டுகளாக நடித்த, ஆதிபகவன் படம் ஏமாற்றி விட்டதால், இப்போது சமுத்திரகனியின் இயக்கத்தில் டபுள் ரோலில் நடித்து வரும், ஜெயம் ரவி, நிமிர்ந்து நில் படத்தை அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இதில், 25 வயது வேடத்தை விட, தொப்பை வைத்து 50 வயது கொண்டவராக நடிக்கும் கேரக்டரில், கூடுதல் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பதாக சொல்லும் ஜெயம் ரவி, இந்த வேடத்துக்காக ஒரு பிரபல இந்தி நடிகரை, ரோல் மாடலாக கொண்டு நடித்துள்ளார். அந்த நடிகர் யார் என்பதை, அப்படம் ரிலீசான பின் கூறுவதாக தெரிவித்துள்ளார்.— சி. பொ.,மோகன்லால் - பூர்ணிமா மலரும் நினைவுகள்!கடந்த, 1980ல் மஞ்சில் விரிஞ்ச பூக்கள் என்ற படத்தில் நடித்த, மோகன்லால் - பூர்ணிமா ஆகிய இருவரும், இப்போது விஜய் நடிக்கும், ஜில்லா படத்தில், மீண்டும் இணைந்துள்ளனர். இதில், விஜய்க்கு அப்பா - அம்மாவாக நடிக்கும் அவர்கள், மிக அந்நியோன்யமாக நடிக்கின்றனர். அவர்களின் சென்டிமென்ட் நடிப்பைப் பார்த்து, உருகிப் போகும் விஜய், மோகன்லால் - பூர்ணிமாவின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கை பற்றியும், அவ்வப்போது கேட்கிறார். அதனால், தங்களது கடந்த காலத்துக்கு சென்று, மலரும் நினைவுகளை விஜய்யிடம் சொல்லி, நெகிழ வைக்கின்றனர்.— சினிமா பொன்னையாஅவ்ளோதான்!