இதப்படிங்க முதல்ல...
அப்பா வேடத்தில் கார்த்திக்!பிரபு, சத்யராஜ், ராஜ்கிரனைத் தொடர்ந்து, இப்போது, மாஜி ஹீரோ கார்த்திக்கும், அப்பா வேடங்களில் நடிக்க துவங்கியுள்ளார். மணிரத்னத்தின், கடல் படத்திலேயே ஏதாவது கேரக்டர் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. இந்நிலையில், கே.வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படத்தில், ஒரு வெயிட்டான வேடத்துக்கு, கார்த்திக்கை, 'புக்' செய்துள்ளனர். கதைப்படி, தனுஷின் அப்பா கேரக்டர் என்று கூறப்படுகிறது.— சினிமா பொன்னையாவிஷால் படத்தில் ஜெய்!தன், விஷால் பிலிம் பேக்டரி மூலம், பாண்டிய நாடு என்ற படத்தை தயாரித்து, நடித்து வரும் விஷால், அடுத்து, ஜெய்யை கொண்டு, ஒரு படத்தை தயாரிக்கிறார். விஷால் நடித்த, தீராத விளையாட்டு பிள்ளை, சமர் படங்களை இயக்கிய இயக்குனர் திரு, இப்படத்தை இயக்குகிறார். இதுவரை சாதாரணமான கெட்டப்புகளில் மட்டுமே நடித்து வந்த ஜெய், முதன் முறையாக, இப்படத்துக்காக, தன் மேனரிசம், கெட்டப்பை மாற்றி நடிக்கிறார். அதோடு, இப்படத்தில் ஆக்ஷன் கோதாவிலும் குதிக்கிறார். — சி.பொ., நயன்தாராவுக்கு மீண்டும் நந்தி விருது!தெலுங்கில் நடித்த, ராமராஜ்ஜியம் படத்துக்காக, நந்தி விருது பெற்ற நயன்தாரா, இப்போது, அங்கு நடிக்கும் அனாமிகா படத்திற்காகவும், நந்தி விருதை பெற்றுவிட, முழு உத்வேகத்துடன் நடித்து வருகிறார். அதனால், அப்படத்தின் முதல் பதிப்பில், வித்யாபாலன் நடித்ததை விடவும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நயன்தாரா, சில டேக்கை டைரக்டரே ஓ.கே., செய்தாலும், அதில் தனக்கு திருப்தி ஏற்படவில்லை யென்றால், மீண்டும் நடித்துக் கொடுக்கிறார். நயன்தாராவின், இந்த நடிப்பு வெறியைப் பார்த்து, ஆந்திர பட உலகமே அசந்து நிற்கிறது. கற்ற வித்தையைக் காய்ச்சி குடிக்கிறவன் போல்!— எலீசா'டூ-பீஸ்' நடிகையாகும் தன்ஷிகா!பரதேசி படத்தில், குழந்தைக்கு தாயாக நடித்த தன்ஷிகா, தற்போது மெச்சூரிட்டியான, அழுது வடியும் கேரக்டர்களை ஓரங்கட்டிவிட்டு, கவர்ச்சிகரமான கிளுகிளுப்பு வேடங்கள் பக்கம் திரும்பியுள்ளார். ஏற்கனவே, மாஞ்சா வேலு உட்பட, சில படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட்டவர் தான் என்றபோதும், தற்போது தமன்னா, நயன்தாரா போன்ற நடிகைகளின் ஆர்ப்பாட்டம் அதிகமாக இருப்பதால், அவர் களை மிஞ்சும் வகையில், 'டூ-பீஸ்' நடிகையாக உருவெடுக்கப் போகிறார். அதனால், யா யா படத்தை அடுத்து, சில மெகா பட டைரக்டர்களை முற்றுகை யிட்டுள்ளார். படுவது பட்டும் பட்டத்துக்கு இருக்க வேண்டும். — எலீசா* இந்திய படங்களில் நடித்த போது, உடல் எடையை குறைக்காத மாதவன், நைட் ஆப் லிவ்விங்டெட் என்ற ஹாலிவுட் படத்துக்காக, பத்து கிலோ எடை குறைத்துள்ளார்.* பெங்களுரைச் சேர்ந்தவரான லட்சுமி ராய், தற்போது, மும்பையில் சொந்தமாக வீடு வாங்கியுள்ளார். அதையடுத்து, தன் மொத்த குடும்பத்தையும் மும்பையில் குடியேற்றியுள்ளார்.பாலிவுட்டில் அமலாபால்!தலைவா படத்தை முடித்த மறுகணமே, தனுஷூடன், வேலையில்லா பட்டதாரி படத்தில் கமிட்டான அமலாபால், அடுத்து, ரமணா இந்தி ரீ-மேக்கான, கப்பார் படத்திலும், நாயகியாக நடிக்கிறார். இதற்காக அவர் ஒரு சிறு முயற்சி கூட எடுக்கவில்லை. அந்த கதைக்கேற்ற, தென்னிந்திய முகம் வேண்டும் என்று, தற்போது, தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகைகளை பரிசீலித்தவர்கள், அமலாபால், 'பெஸ்ட்' என்று, 'ஓ.கே.,' செய்து விட்டனர். இதனால், சொல்லமுடியாத சந்தோஷத்தில் இருக்கும் அமலாபால், அடுத்த அசின் ஆகிவிட வேண்டும் என்று, பரிவாரங்களோடு பாலிவுட்டில் கால்பதித்துள்ளார்.— சினிமா பொன்னையாஇவ்ளோதான்!