இதப்படிங்க முதல்ல...
உஷார் பார்ட்டியான காஜல் அகர்வால்! நட்பு வேறு, தொழில் வேறு என்று நினைக்கிறார் காஜல் அகர்வால். அதனால், என்ன தான் தனக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கொடுக்கும் படாதிபதிகளாக இருந்தாலும், க்ளைமேக்ஸ் காட்சியில் நடிக்கும் முன், மொத்த சம்பளத்தையும் கைப்பற்றி விடுகிறார். ஆனால், 'வர வேண்டிய பைனான்ஸ் வரவில்லை. வந்ததும் தந்து விடுகிறேன்...' என்று நடிக்க அழைத்தால், 'சாரி, அப்படின்னா நானும் அப்புறம் நடித்துக் கொடுக்கிறேன்...' என்று கூலாக சொல்லி, தப்பித்துக் கொள்கிறார். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்! -- எலீசா'கிங் ஆப் த கிங்'இளையராஜா!ஒரு காலத்தில், மூச்சு விட கூட நேரம் இல்லாமல், 'பிசி'யாக இசை யமைத்து வந்த இளையராஜா, இப்போது, 'ரிலாக்'சாகி விட்டார். அதனால், அவ்வப்போது, வெளிநாடுகளுக்கு சென்று, இசை நிகழ்ச்சி நடத்தி வரும் அவர், வரும் டிசம்பர் மாதம், 28ம் தேதி, மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில், பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்துகிறார். 1970 - 80களில் வெளியான, அவரது, ஹிட் பாடல்கள் அனைத்தும், இந்நிகழ்ச்சியில் இடம் பெற இருக்கின்றன. இளையராஜாவை கவுரவிக்கும் வகையில், 'கிங் ஆப் த கிங்' என்ற பெயரில், இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.17 கோடி ரூபாய்க்கு விற்ற சிம்பு படம்! சிம்பு நடித்த பல படங்கள், போணி ஆகவே கஷ்டப்பட்டு வரும் நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில், அவர் நடிக்கப் போகும் படத்தை, படப்பிடிப்பு துவங்கும் முன்னே, 17 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளனர். ஆனால், படத்தின் மொத்த பட்ஜெட், எட்டு கோடி ரூபாய் தான். இதனால், அப்படத்தை தயாரிக்கும் சிம்புவின் தந்தையான டி.ஆர்., மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். மேலும், 'பாண்டிராஜ் மாதிரி நம்பிக்கைக்குரிய இயக்குனர்களின் படங்களில் மகனை நடிக்க வைத்து, தொடர்ந்து தானும் படங்கள் தயாரித்தால் என்ன?' என்றும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார். -- சி.பொ.,பழிவாங்கும் வேடத்தில் நயன்தாரா! நயன்தாராவின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்திருப்பதை அடுத்து, அவர் பல ஆண்டுகளுக்கு முன் படுகவர்ச்சியாக நடித்த, சில தெலுங்கு படங்கள் துாசு தட்டப்படுகின்றன. அதில், ஆஞ்சநேயலு என்ற பெயரில் நயன்தாரா நடித்த படம், விரைவில் தமிழ் பேச வருகிறது. இப்படத்தில், பழி வாங்கும் ஆக்ஷன் வேடத்தில் நடித்திருந்தாலும், டூ-பீஸ் நடிகையாகவும், துகில் உரித்துள்ளார் நயன்தாரா. தற்போது, டீசன்டான வேடங்களாக தேடிப்பிடித்து நடிப்பதால், இப்படம் தன் இமேஜுக்கு பங்கம் விளைவித்து விடுமோ என்று தடுமாறும் நயன்தாரா, மேற்படி தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு, படுகவர்ச்சியான காட்சிகளை கத்திரித்து வெளியிட்டால், குறைவான சம்பளத்தில், ஒரு தெலுங்கு படத்தில் நடித்து தருவதாக, பேரம் பேசிக் கொண்டிருக்கிறார். அம்பலத்தில் ஏறுவதை அடக்கம் செய்ய பார்க்கிறாள்! -- எலீசாபரபரப்பை ஏற்படுத்தும் அமலாபால்! தலைவா படம், பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்த அமலாபாலுக்கு, அதன்பின், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மார்க்கெட்டும் கவிழ்ந்து விட்டது. அதனால், தாய்மொழியான மலையாளத்தில் மூன்று படங்களை அதிரடியாக கைப்பற்றியுள்ள அமலாபால், மற்ற மலையாள நடிகைகளைப் போன்று முழுசும் போர்த்திக் கொண்டு நடிக்காமல், பாலிவுட் நடிகைகளாட்டம் படுகவர்ச்சியாக நடித்து, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். மேலும், அவர் நடிக்கும் படங்களை, தமிழிலும் வெளியிட்டு, வசூல் செய்யலாம் என்று நினைக்கும் படாதிபதிகள், அமலாபாலுக்கு கூடுதலான சம்பளம் கொடுத்து, 'புக்' செய்துள்ளனர். அலை மோதும் போதே கடலாட வேண்டும்! -- எலீசாசிரித்தவர்களை சிந்திக்க வைத்த தனுஷ்!தனுஷ், இந்தி படத்தில் நடிக்கப் போகிறார் என்றதும், சில கோலிவுட் நடிகர்கள், விழுந்து விழுந்து சிரித்தனர். ஆனால், தனுஷ் நடித்த, 'ராஞ்ஜனா' இந்திப்படம் வெற்றி பெற்றதும், வாயடைத்துப் போயினர். அதை இப்போது சொல்லும் தனுஷ், 'திறமை என்பது, பர்சனாலிட்டியில் இல்லை. பர்பாமென்சில் தான் உள்ளது என்பதை நான் நிரூபித்துள்ளேன். மேலும், என்னால் ஹாலிவுட் சினிமாவில் கூட சாதித்து காட்ட முடியும்...' என்றும், தன்னைப் பார்த்து சிரித்தவர்களுக்கு, சவால் விட்டு பேசுகிறார்.-- சினிமா பொன்னையா.அவ்ளோதான்!