உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல....

இந்தியில் நடிக்க மறுத்த விக்ரம்!'ராவணன்' படத்தில் விக்ரமின் நடிப்பைப் பார்த்து, ஒரு இந்திப்பட இயக்குனர் அவருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், விக்ரமோ, அந்த வாய்ப்பை ஏற்கவில்லை. 'என் தாய்மொழியான தமிழில் தொடர்ந்து நடிப்பதில் தான் எனக்கு திருப்தி கிடைக்கிறது. மேலும், தமிழில் என் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவே விரும்புகிறேன்...' என்று இந்தியில் நடிக்க மறுத்திருக்கிறார்.  — சினிமா பொன்னையா.ஸ்ருதி  புதிய கொள்கை!இந்திர விழா, குரு சிஷ்யன் படங்களில் படு கவர்ச்சியாக நடித்த ஸ்ருதிக்கு, அந்த படங்களின் தோல்வியால், வாய்ப்புகள் வரவில்லை. இருப்பினும், கோடம்பாக்கத்தில் வளையவரும் நடிகை, யாருடைய யோசனையிலோ, தன் உடம்பை குறைத்து வருகிறார். அதோடு, முன்வரிசை ஹீரோக்களுடன் மட்டுமே டூயட் பாடும் கொள்கையிலும் விடாப்படியாக உள்ளார். கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்காகுமா? — எலீசா.வில்லன்  வேடத்தில் இயக்குனர்!மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் படங்களை இயக்கிய ராசுமதுரவன், 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படத்தில் வில்லனாக நடிக்கயிருந்தார். ஆனால், 'முத்துக்கு முத்தாக' பட இயக்கத்தில் பிசியாகி விட்டதால், மேற்படி படத்தில் அவரால் நடிக்க இயலவில்லை. அதனால், 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படத்தின் இயக்குனரான ஏகாதசியே இப்போது அந்த வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.     — சி.பொ.,நயன்தாரா  இடத்துக்கு  பலத்தப் போட்டி!நயன்தாராவின் இடத்தைப் பிடிக்க மேக்னா ராஜ் தீவிரம் காட்டி வரும் நிலையில், தற் போது காண்டீபன் படத்தில் நடித்து வரும் ரியாவும், 'நான்தான் அடுத்த நயன்தாரா...' என்று தொடை தட்டி வருகிறார். காரணம், இவரை பார்த்த சிலர், நயன்தாராவின் ஜெராக்ஸ் மாதிரி இருக்கிறாய் என்று ரியாவை உசுப்பி விட்டதுதான். இதனால், அடுத்தடுத்து பிகினி உடையில்  நடிக்கவும் தயாராகி வருகிறார். தலை எழுத்து இருக்க தந்திரத்தால் ஆவது என்ன?  — எலீசா.மீண்டும்  எம்.எஸ்.வி.,!காதல் மன்னன், காதலா காதலா போன்ற படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்தார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். ஆனால், அதன் பிறகு வெயிட்டான கேரக்டர்கள் கிடைக்காததால், நடிப்பை விட்டு விலகியிருந்த எம்.எஸ்.வி., இப்போது, 'மகாராஜா' என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றுகிறார். இதில் அவருக்கு, கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம் கொடுத்துள்ளார் இயக்குனர் மனோகரன் .  — சி.பொ.,சொடக் போடும் த்ரிஷா!'நான் தமிழச்சி...' என்று அடிக்கடி நினைவு கூர்ந்து கொள்ளும் த்ரிஷா, இதுவரை தனக்கு டப்பிங் பேசியதில்லை. ஆனால், சமீபகாலமாய் சில அந்நிய மொழி நடிகைகளே தமிழில் டப்பிங் பேசுவதில் ஆர்வம் காட்டுவதைத் தொடர்ந்து த்ரிஷாவை சிலர் கிண்டல் செய்யத் துவங்கி விட்டனர். இதனால், டென்ஷனாகிப் போன த்ரிஷா, 'மன்மதன் அம்பு படத்திலிருந்து இனி எனக்கு நானேதான் டப்பிங் பேசுவேன்...' என்று சொடக் போட்டு வருகிறார்.  கைப்பொருள் போனால் கால் காசுக்கும் மதிக்க மாட்டார்கள்.  — எலீசா.சந்தானமும்,  சந்தனமும்!கல்யாணத்துக்கு எப்படி சந்தனம் முக்கியமோ அதே மாதிரி தமிழ் சினிமாவுக்கு காமெடி நடிகர் சந்தானமும் முக்கியமாகி விட்டார் என்கின்றனர் சில இயக்குனர்கள். காரணம் கேட்டால், 'இந்த இடத்தில் இப்படியொரு காமெடி சீன் வேண்டும் என்று டைரக்டர் சொல்லி விட்டால் போதும். அதுபற்றி நிறைய ஹோம் ஒர்க் செய்து பார்த்துவிட்டே கேமரா முன் வருகிறார். அந்த அளவுக்கு சின்சியராக உழைக்கும் சினிமாக்காரராக இருக்கிறார் சந்தானம்!' என்று உசத்தி பேசுகின்றனர்.— சி.பொ.,தமிழில்  அறிமுகமான  நவீன கேமராக்கள்! 'சனிக்கிழமை சாயங்காலம் - 5 மணி' படத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக, 'எச்.டி.எஸ்.எல்.ஆர்.,' கேமராவை பயன்படுத்தி உள்ளனர். அதைத்  தொடர்ந்து, 'கோ' படத்தை இயக்கிவரும் கே.வி.ஆனந்த், 'பான்டம் பிளக்ஸ்' என்ற நவீன டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தியுள்ளார். இந்த கேமராவில் படமாக்கிய உடனேயே அந்த காட்சியை திரையில் போட்டு பார்க்க முடியுமாம். இதுவும் இந்தியாவில் முதன் முறையாக இந்த, 'கோ' படத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.— சி.பொ.        '11 மணி காட்சி' நடிகையான கிரண்!'இது காதல் வரும் பருவம்' படத்தைப் போலவே, 'வாலிபமே வா' படத்திலும் ஆபாச நடிகையாகியுள்ளார் கிரண். இதைப் பார்த்து மேலும் சில பலான பட கம்பெனிகள் அவரை முற்றுகையிட்டுள்ளன. அதனால், ஷகிலா போன்று, '11 மணி காட்சி' நடிகையாகியுள்ள கிரண், தடாலடியாக தன் படக் கூலியையும் உயர்த்தி விட்டுள்ளார். வந்தளவிலே மாமியார் பந்தடித்தாள்; வரவர மாமி கழுதை போலானாள்.  — எலீசா.கணவரை  ஹீரோவாக்கும்  நடிகைகள்!'திருமதி தமிழ்' என்ற படத்தின் மூலம், கணவர் ராஜகுமாரனை தேவயானி ஹீரோவாக்கியிருப்பது போல், தன் கணவர்,  பாடகர் கிரீஷை சங்கீதாவும், கணவர் தீபக் பகாவை சிம்ரனும் ஹீரோவாக்கியே தீருவது என்ற வெறியில் உள்ளனர். ஒருவேளை தயாரிப்பாளர்கள் யாரும் சிக்கவில்லையெனில், சொந்த படமெடுக்கவும் மேற்படி நடிகைகள் திட்டமிட்டுள்ளனர். வற்றிற்றாம் கள்; வறண்டாளாம் சாணாத்தி; ஊறிற்றாம் கள்; உதித்தாளாம் சாணாத்தி. — எலீசா.கேரக்டர்  ஆர்டிஸ்டாக மாறிய  சரண்யா மோகன்!'வெண்ணிலா கபடிக்குழு' படத்திற்கு பிறகு,'பஞ்சாமிர்தம்' உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்த சரண்யா மோகன், 'இனி, கதாநாயகி சான்சுக்காக  காத்திருக்கப் போவதில்லை!' என்கிறார். ஆறுமுகம், ஈரம் படங்களைத் தொடர்ந்து, 'வேலாயுதம்' படத்திலும் தங்கை ரோலில் நடிக்கும் சரண்யா, இனி கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார். பட்டறை வாய்த்தால் பணி வாய்க்கும்! — எலீசா.பாக்யராஜின் காதல் டிப்ஸ்!தனுஷ் - ஜெனிலியா நடித்து வரும், 'உத்தமபுத்திரன்' படத்தில் கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், அம்பிகா, விவேக், கருணாஸ் என்று ஒரு நட்சத்திர கூட்டமே நடிக்கின்றனர். என்றாலும், பாக்யராஜுக்கு மட்டும் வலுவான வேடம். காதல் ஜோடிகளான தனுஷ், ஜெனிலியாவை சேர்த்து வைக்கும் பொறுப்பான கதாபாத்திரத்தில் நடிக்கும் பாக்யராஜ், காதலருக்கு நிறைய டிப்சும் வழங்குகிறார்.  — சினிமா பொன்னையா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !