உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

டுவிட்டரில் இணைந்தார் வடிவேலு!சமீபத்திய நடிகர், நடிகையர், டுவிட்டர், பேஸ்புக் என்று கணக்கு துவங்கி, ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர். இந்நிலையில், ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தில் நடித்து வரும் வடிவேலுவும், டுவிட்டரில் இணைந்துள்ளார். அதன் மூலம், தான் நடித்து வரும் படம் பற்றிய புகைப்படங்கள் மற்றும் ருசிகர செய்திகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இதனால், அவர் கணக்கு துவங்கி ஒரே மாதத்தில், ஐந்தாயிரம் ரசிகர்கள் அவருடன் நண்பர்களாகி விட்டனர். இதைப் பார்த்து, சந்தானம், சூரி போன்ற காமெடியன்களும், டுவிட்டரில் இணைய, முடிவு செய்துள்ளனர்.‑ சினிமா பொன்னையாதனுஷ் கெட்-டப் மாறுகிறது!மரியான், நய்யாண்டி என்ற இரண்டு படங்களும், தனுஷை ஏமாற்றி விட்டதால், தற்போது நடித்து வரும், வேலையில்லா பட்டதாரி மற்றும் அநேகன் படங்களை, தன் வெற்றிப்பட பட்டியலில் சேர்த்து விட வேண்டுமென்று, மெனக்கெட்டு வருகிறார் தனுஷ். இதில், அநேகன் படத்தில், மூன்று விதமான காலகட்டத்திற்கேற்ப, தன் கெட்-டப்பை மாற்றி, நடித்து வருகிறார். அதனால், ஒவ்வொரு நாளும், தனுஷின் மேக்கப் மற்றும் கெட்டப் சேஞ்சுக்காக, மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகிறது.— சி.பொ.,பிச்சை எடுத்த வித்யா பாலன்!த தர்ட்டி பிக்சர்ஸ், மற்றும் கஹாணி படங்களில் நடித்த வித்யா பாலன், அடுத்து, துப்பறியும் நிபுணராக ஒரு படத்தில் நடிக்கிறார். இதற்கு முன், கிளாமர் மற்றும் குடும்ப கதைகளில் நடிப்பதற்காக, உடற்கட்டை தளதளவென்று வைத்திருந்த வித்யா, இப்போது, ஓரளவு மெலிந்து உள்ளார். இப்படத்தில் பிச்சைக்காரி கெட்டப்பில் துப்பறியும் சீனுக்காக, ஐதராபாத்தில் உள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷனில் படப்பிடிப்பு நடத்திய போது, நிஜ பிச்சைக்காரியே தோற்றுப் போகும் அளவுக்கு, தத்ரூபமாக நடித்துள்ளார் வித்யா பாலன். ஆட்டத்துக்கு தகுந்த மேளம்; மேளத்துக்கு தகுந்த ஆட்டம்!— எலீசா.காஜல் அகர்வாலின் ஆலோசனைக் கூட்டம்!ஜில்லா படத்தின் பாடல் காட்சிகளில், கூடுதலான கவர்ச்சி கட்ட தயங்கினார் காஜல் அகர்வால். அதனால், லண்டன் நடிகை ஒருவரை வரவழைத்து, விஜய்யுடன், ஒரு குத்துப்பாட்டுக்கு, 'கிளுகிளு' நடனமாட வைத்தனர். இதனால், அந்த ஒரு பாட்டிலேயே, காஜலை காணாமல் செய்து விட்டார் லண்டன் நடிகை. இதையடுத்து, பாடல் காட்சிகளில் தாராளம் காட்டி நடித்து, மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளுமாறு, சிலர், காஜலுக்கு அறிவுரை செய்துள்ளனர். அதனால், 'புதிய படங்களில், தாராளம் காட்டவா, வேண்டாமா...' என்று அபிமானிகளிடம் கூடி, ஆலோசித்து வருகிறார். உனக்கு ஆச்சு; எனக்கு ஆச்சு; பார்க்கிறேன் ஒரு கதை!— எலீசாஆக் ஷன் கதை தேடும் சித்தார்த்!பாய்ஸ் பட நாயகன் சித்தார்த், ஆயுத எழுத்து உட்பட, சில ஆக் ஷன் படங்களில் நடித்த போதும், அவர் மீதான, 'ப்ளேபாய்' இமேஜ், இன்னமும் அப்படியே தான் உள்ளது. ஆனால், இதை தொடரவிடக்கூடாது என்று நினைக்கும் சித்தார்த், ஜிகிர்தண்டா மற்றும் காவியத் தலைவன் படங்களில், மாறுபட்ட கதைகளில் நடித்திருப்பவர், அடுத்து, ரொமான்ஸ் கதைகளை ஏறக்கட்டிவிட்டு, சமூகத்தை களையெடுக்கும் கதைகளில் நடிக்கப் போகிறார். அதற்காக, சில ஆக் ஷன் பட இயக்குனர்களை சந்தித்து, சில படங்களை முன் வைத்து, அதே பாணியில் தனக்காக கதை செய்யுமாறு கேட்டு வருகிறார். அதோடு, ஆக் ஷனுக்கேற்ப, தன் பாடி லாங்குவேஜையும் மாற்றப் போகிறார் சித்தார்த்.— சி.பொ.,கவர்ச்சி கோதாவில் பிந்து மாதவி!விமல், சிவகார்த்திகேயனுடன் நடித்த போது, அவர்களுடன் இணைத்து, கிசுகிசுவில் சிக்கிய பிந்து மாதவி, அப்போது பரபரப்பாக பேசப்பட்டார். ஆனால், மேற்படி நடிகர்கள் தொடர்ந்து அவருடன் நடிப்பதை தவிர்த்து விட்டதால், இருக்கிற இடமே தெரியாமல் இருக்கிறார் பிந்து மாதவி. இருப்பினும், கைவசம் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், கலக்குற மாப்ளே மற்றும் தமிழில் எண்1ஐ அழுத்தவும் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த மூன்று படங்களிலுமே, முதன்மை நாயகியாக நடிக்கும் பிந்துமாதவி, இதுவரை இல்லாத அளவுக்கு, கவர்ச்சிக் கோதாவிலும் இறங்கியுள்ளார். அதனால், 'இந்த படங்கள் திரைக்கு வரும் போது, பரபரப்பான கமர்ஷியல் கதாநாயகி ஆகிவிடுவேன்...' என்று, புதிய தகவலை வெளியிட்டு, கமர்ஷியல் இயக்குனர்களின் கவனத்தை, ஈர்த்து வருகிறார். ஆடாதது எல்லாம் ஆடி, அவரைக்காயும் பறித்தாச்சு!— எலீசாமுதலிடம் பிடித்த கேத்ரினா கைப்!லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல வாரப் பத்திரிகை ஒன்று, உலக அளவில் உள்ள தற்போதைய நடிகைகளில், யார் அதிக கவர்ச்சியானவர் என்றொரு, வாக்கெடுப்பு நடத்தியது. அதில், முதல் மூன்று இடங்களை, இந்திய நடிகைகளே கைப்பற்றியுள்ளனர். முதல் இடத்தை, கேத்ரினா கைப், இரண்டாவது இடத்தை, பிரியங்கா சோப்ரா, மூன்றாவது இடத்தை, தீபிகா படுகோனேவும் பிடித்துள்ளனர். இந்த செய்தி வெளியானதில் இருந்து, மேற்படி நடிகைகளுக்கு பாலிவுட்டில் இன்னும் மவுசு கூடியுள்ளது. அதிலும், கேத்ரினாவுக்கு, ஹாலிவுட் சினிமா வாய்ப்புகளும் கிடைக்க இருக்கிறது. ஆனால், இதில் ஒரு ஆறுதல் இடம் கூட, தென்னிந்திய நடிகைகளுக்கு கிடைக்கவில்லை என்பது தான் சோகம்.— சினிமா பொன்னையா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !