இதப்படிங்க முதல்ல...
லாரன்ஸ் தயாரித்த மோடி ஆல்பம்!சில ஆண்டுகளுக்கு முன், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, வீடியோ ஆல்பம் ஒன்றை வெளியிட்டார் நடிகர் ராகவா லாரன்ஸ். அதைத்தொடர்ந்து, சமீபத்தில் மோடி பிரதமரானதை அடுத்து, 'மீண்டும் ஒரு சுதந்திரம்' என்ற பெயரில், அவரை புகழ்ந்து, ஒரு வீடியோ ஆல்பம் வெளியிட்டுள்ளார். செருப்பு தைத்தவர் அமெரிக்க ஜனாதிபதி ஆனது போல், சாதாரண டீ வியாபாரி ஒருவர், ஒரு நாட்டின் பிரதமராகியுள்ளார் என்ற கருத்தில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தில், இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில், பாடல் அமைக்கப்பட்டுள்ளது.— சினிமா பொன்னையாமேல்தட்டு நாயகி கேட்கும் வடிவேலு!தெனாலிராமன் படம் வெற்றி பெறாததால், அடுத்தபடியாக வடிவேலுவை இயக்க காத்திருந்த சில இயக்குனர்கள், அந்த முடிவை கை விட்டனர். அதனால், மீண்டும் யுவராஜ் தயாளன் இயக்கத்திலேயே அடுத்த படத்திலும் நடிக்க முடிவு செய்துள்ளார் வடிவேலு. மேலும், அந்த படத்தை தயாரிக்க படாதிபதிகள் யாரும் முன்வராததால், தானே தயாரிப்பாளராகியுள்ள வடிவேலு, இம்முறை முன்னணி கதாநாயகிகளுடன் மட்டுமே டூயட் பாடுவது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால், ஸ்கிரிப்ட் வேலைகளுக்கு நடுவே, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா என்று, மேல்தட்டு ஹீரோயினிகளிடமும் கால்ஷீட் கேட்டு துரத்துகிறார் வைகைப்புயல்.- சி.பொ.,விஜய சேதுபதியின் பாசறைக்குள் பிந்து மாதவி!விமல், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள், பிந்து மாதவியை கழற்றி விட்டதால், அவரது மார்க்கெட் சரிந்து விட்டது. அதனால், தன்னை தாங்கிப் பிடிக்க யாரேனும் ஹீரோக்கள் கிடைப்பாரா என்று, திரைக்குப் பின், தீவிரம் காட்டி வந்த பிந்த மாதவி, இப்போது விஜய சேதுபதியை, 'கேட்ச்' செய்து விட்டார். ஏற்கனவே, அவரது பாசறையில் ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி, நந்திதா என, பல நடிகைகள் இருந்தபோதும், அவரை லாவகமாக கைப்பற்றி விட்ட பிந்து மாதவி, விஜய சேதுபதியுடன், வசந்த குமாரன் படத்தில், கமிட்டாகி விட்டார். மேலும், விஜயசேதுபதியின் பாசறை நடிகையாக வேண்டும் என்பதற்காக, சம்பளத்தில் சில லட்சங்களை தள்ளுபடி செய்யவிருப்பதாகவும், கோலிவுட்டில் அறிவித்துள்ளார். இட்ட படியே ஒழிய, ஆசைப்பட்டுப் பலன் இல்லை!- எலீசாசமந்தா முடிவு!இதுவரை முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த நடிகை சமந்தா, தற்போது சாய்சீனிவாஸ் என்ற புதுமுக நடிகருடன் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். காரணம், இப்படத்தின் மொத்த கதையும் சமந்தாவின் கதாபாத்திரத்தை சுற்றியே பின்னப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்த்தால், அப்படத்தில் நான்தான் கதாநாயகன் மாதிரி என்று சொல்லும் சமந்தா, இனிமேல் தனக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்திருப்பதாக சொல்கிறார். இதையடுத்து, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளுடன் சில தெலுங்கு டைரக்டர்கள் சமந்தாவை முற்றுகையிட்டுள்ளனர். தானே வளர்ந்து தவத்தார் கொடி எடுத்தான்!- எலீசாவைரமுத்துவுடன் இணைந்த இளையராஜா வாரிசுகள்!ஒரு காலத்தில் இணைந்து செயல்பட்டு வந்த இளையராஜா - வைரமுத்து இருவரும், பின், மனஸ்தாபம் காரணமாக, தங்களது கூட்டணியை முறித்துக் கொண்டனர். அதன்பின், பாரதிராஜா இவர்கள் இருவரையும் இணைக்க எடுத்த முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில், இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கும் சீனுராமசாமி, அப்படத்திற்கு இசையமைக்கும் இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கரின் இசையில், வைரமுத்துவை பாடல் எழுத வைத்தார். அவரைத் தொடர்ந்து, இப்போது, அனேகன் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ், தன் இசையில், வைரமுத்து எழுதியுள்ள, 'ஆத்தாடி ஆத்தாடி' என்ற பாடலை, இளையராஜாவின் மகள் பவதாரணியை பாட வைத்துள்ளார். ஆனால், இதுகுறித்து இளையராஜா இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை.- சினிமா பொன்னையாகறுப்பு பூனை!அருந்ததி நடிகை இந்த ஆண்டு இறுதியிலாவது கழுத்தை நீட்டுவார் என்று, அவரது பெற்றோர் பார்த்து வைத்திருந்த மாப்பிள்ளை காத்துக் கொண்டிருந்தார். ஆனால், அடுத்த ஆண்டிற்கும் சேர்த்து, படங்களில் நடிக்க, ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை, அவரை அம்போ என, விட்டு விட்டார். இதனால், 'ஒரு நடிகைக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்க நான் தயாரில்லை...' என்று, அந்த தொழிலதிபர் மாப்பிள்ளை, அறுத்துக் கொண்டு ஓடி விட்டார்.போடா போடி நடிகையை, எப்படியாவது மேல் தட்டுக்கு கொண்டு வந்து விட துடிக்கிறார், திமிரு நடிகர். மேலும், அவரது கவர்ச்சி புகைப்படங்களை, தன் மொபைல் போனில் வைத்திருப்பவர், தன் சக நடிகர்களிடம் அதைக்காட்டி, நடிகையின் உடல் அழகை, அங்கம் அங்கமாய் வர்ணித்து தள்ளுகிறார்.பப்ளிமாஸ் நடிகை உடம்பை மெலிய செய்த போதும், இடுப்பில் தொங்கிய சதை குறையவில்லை. அதனால், சமீபத்தில் லண்டன் சென்ற நடிகை, ஊசி மூலம் தன் சதையை கரைத்து விட்டு, சென்னை திரும்பியுள்ளார். இதனால், நடிகையின் எடை மேலும் இரண்டு கிலோ குறைந்துள்ளது.துளிகள்!* தார தப்பட்டை படத்துக்காக, பக்கா கரகாட்ட பெண்ணாக, தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் வரலட்சுமி.* ஆரம்பத்தில் தமிழ் பேச பயிற்சி எடுத்த ஹன்சிகா, தமிழ் உச்சரிப்பு சரியாக வராததால், அந்த முயற்சியை கிடப்பில் போட்டு விட்டார்.* அஜித்தின், 55வது படத்தில், கல்லூரி மாணவி வேடத்தில் நடிக்கிறார் அனுஷ்கா.அவளோதான்!