உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

விஜய் அரசியல் பிரவேசம்!நடிகர் எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆனதால், அதன்பின் வந்த பல நடிகர்களுக்கும், முதல்வர் ஆசை தொற்றிக் கொண்டது. அவ்வகையில், அவருக்கு பின் அரசியலுக்கு வந்து, ஆட்சியைப் பிடிப்பார் என்று, எதிர்பார்க்கப்பட்டவர் ரஜினி. ஆனால், சமீபகாலமாக, அவர் அரசியலுக்கு வருவதற்கான, அறிகுறிகளே இல்லை. அதனால், விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து, விஜய் வட்டாரம், அரசியல் கோதாவில் இறங்கியிருக்கிறது. தன் மக்கள் இயக்கத்தின் மூலம், ஏழை மக்களுக்கு, நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது செய்து வரும் விஜய்யிடம், 'எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?' என்று, அவரது ரசிக கோடிகள், நச்சரித்து வருகின்றனர். இதையடுத்து, அவர்களுக்கு, 'பேஸ்புக்'கில் பதிலளித்த விஜய், 'வாழ்க்கை ஒரு வட்டம்; இன்றைக்கு கீழ இருப்பவன், நாளைக்கு மேல இருப்பான்... அப்ப பார்க்கலாம்...' என்று, சூசகமாக அறிவித்துள்ளார்.— சினிமா பொன்னையா.நயனை அரவணைக்கும் ஆந்திரவாலாக்கள்!தமிழ் சினிமாவில், ஆர்யா மட்டும் தான் நயன்தாராவை அரவணைத்து வந்தார். ஆனால், ஆந்திராவிலோ, மகேஷ்பாபு, வெங்கடேஷ், நாகார்ஜுனா என, பலர் இப்போதும், அவரை அரவணைத்து வருகின்றனர். தமிழுக்கு அனுஷ்கா, தமன்னா போன்றோர், மீண்டும், என்ட்ரி கொடுத்த போது, நயன்தாரா கலங்கி நின்றதைப் பார்த்த மேற்படி ஹீரோக்கள், அவரை தெலுங்கு தேசத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். அதனால், தற்போது, தமிழில் நடித்து வரும், தனி ஒருவன் மற்றும் இது நம்ம ஆளு படங்களுக்கு பின், தெலுங்கிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார் நயன்தாரா. இருக்கிற அளவோடு இருந்தால், எல்லாம் தேடி வரும்.— எலீசா.லிங்காவில் நவீன கேமரா!கோச்சடையான் படத்தில், மோஷன் கேப்சர் டெக்னாலஜியை முதன் முறையாக இந்தியாவுக்கு கொண்டு வந்தவர் ரஜினி. அதையடுத்து, இப்போது, லிங்கா படத்துக்காக, இதுவரை எந்த இந்திய படங்களிலும் பயன்படுத்தப்படாத, ஒரு அதிநவீன கேமராவை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக, ரஜினி நடிக்கும் சண்டைக் காட்சிகளில் மட்டுமே, இந்த கேமரா பயன்படுத்தப்படும். அதை இயக்குவதற்காக ஹாலிவுட்டில் இருந்து சிலரை வரவழைத்திருக்கின்றனர். இந்த கேமராவுக்கு, ஒரு நாள் வாடகையே, 10 லட்சம் ரூபாய். இதே போல், லிங்காவில், மேலும், பல பிரமாண்டங்கள் இடம் பெறப்போவதாக கூறுகின்றனர்.- சி.பொ.,விருது ஆசையில் ஹன்சிகா!தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை, அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள படம், அரண்மனை. பழங்கால அரண்மனையில் நடந்த சம்பவத்தைக் கொண்டு உருவாகியுள்ள இந்த திகில் படத்தில், சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்தது போன்ற கெட்டப்பில் நடித்துள்ள ஹன்சிகா, உடம்பில் ஆவி புகுந்து கொள்ள, தலைவிரி கோலத்தில் அதிரடி ஆட்டம் போட்டுள்ளார். குறிப்பாக, சந்திரமுகி படத்தில் நடித்த ஜோதிகாவின் நடிப்பை மிஞ்சி விட வேண்டுமென்று உயிரைக் கொடுத்து நடித்திருப்பதாக சொல்லும் ஹன்சிகா, சந்திரமுகியில் நடித்த ஜோதிகாவுக்கு விருது கிடைத்தது போன்று, தனக்கும் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும்!— எலீசாதனுஷுக்கு நிபந்தனை போட்ட பட நிறுவனம்!சிவகார்த்திகேயனை, 3 படத்தின் மூலம், சினிமாவுக்கு கொண்டு வந்தவரே, தனுஷ் தான். அதன்பின், தான் தயாரித்த, எதிர்நீச்சல் படத்திலும், அவரை நாயகனாக நடிக்க வைத்த தனுஷ், இப்போது, டாணா என்ற படத்தையும், சிவகார்த்திகேயனை வைத்து, தயாரித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தன் தயாரிப்பில், வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் நடித்துள்ள தனுஷ், அப்படத்தை, ரிலீஸ் செய்வது சம்பந்தமாக, ஒரு நிறுவனத்திடம் பேசினார். அப்போது, 'நீங்கள் நடித்த படத்தை வெளியிட வேண்டுமானால், சிவகார்த்திகேயனை வைத்து, நீங்கள் தயாரித்துள்ள, டாணா படத்தையும், எங்களுக்கு தர வேண்டும்... ' என்று, நிபந்தனை போட்டனர். காரணம், 'ஒருவேளை உங்கள் படத்தினால், எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால், அதை, சிவகார்த்திகேயன் படத்தில், எடுத்து விடுவோம்...' என்றனர். ஆக, 'சிவகார்த்திகேயன் படத்தை தந்தால் தான், உங்கள் படத்தை வாங்குவோம்...' என்று, அவர்கள் நேரடியாகவே சொன்னதால், தன் மார்க்கெட் மந்தமாகி விட்டதை எண்ணி, கடந்த சில வாரங்களாக, சோர்வாக காணப்படுகிறார் தனுஷ்.— சினிமா பொன்னையா.கறுப்பு பூனை!அட்டகத்தி நடிகை, அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டுமென்று, சில மேல்தட்டு இயக்குனர்களின் அலுவலக கதவை தட்டினார். ஆனால், முதல் ரவுண்டாக தங்களுடன் பார்ட்டி வகையறாக்களில் கலந்து கொண்டால்தான், படத்தில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தையையே துவங்குவோம் என்று, மேற்படி இயக்குனர்கள் கூறி விட்டனர். விளைவு, 'இதுக்கெல்லாம், நான் சரிப்பட்டு வர மாட்டேன்...' என்று பின் வாங்கி விட்டார் நடிகை.சமீபகாலமாக, தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அந்த மணியான இயக்குனரின் அடுத்த படத்தில், நடிப்பதாக சொன்ன ஆந்திர ஹீரோக்கள், இப்போது, பின் வாங்குகின்றனர். இதற்கு காரணம், சொந்தப் படம் என்பதால், அவர்களுக்கான, படக்கூலியையும் பாதியாக குறைத்து விட்டார் மேற்படி இயக்குனர். இதனால், 'யாராவது வாரிசு நடிகர்களை அறிமுகம் செய்யலாமா...'என்று யோசித்து வருகிறார், மணியானவர்.துளிகள்!*மார்க்கெட் சூடு பிடித்து விட்டதால், படக்கூலியை, 15 லட்சமாக உயர்த்தி விட்டார் நந்திதா.* தன் புதிய படத்திற்கு, சில எழுத்தாளர்களை அணுகி, வசனம் எழுத சொல்லி வருகிறார், மணிரத்னம். * விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக இநதி நடிகை அலியாபட் நடிக்கவுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !