உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நேற்றின் நிழல்!மலர் சருகாக மாறுவதைஏற்றுக் கொள்ளும்எதார்த்தம் இல்லாமல்ஏன் புலம்புகிறாய்!ஆயுள் முழுவதும்வளமை வற்றாதஜீவநதி தான்வாழ்க்கை என்றுயார் சொன்னது?இன்பத்தைசில நிகழ்வுகள்அழைத்து வந்துஅறிமுகம் செய்வதைப் போலதுன்பத்தைசில முடிவுகள்விளைத்தெடுத்துசோகத்தை குவிக்கும்!காத்திருந்த கனவுகளைகலைத்து விட்டுநெஞ்சை காயப்படுத்திசில உறவுகள் செல்லும்!எப்படியாயினும்எதார்த்தத்தைஏற்கும் துணிவைஉன் தோழனாக்கு!எதிர்பார்ப்புகளைவெளியே வைத்து விட்டுஎதார்த்தத்துடன் மட்டும்உறவாடு!இன்றைய நிகழ்வுநேற்றைய நிழல் அல்லஇது - நிகழ்காலத்தின் நிஜம்!நேற்று மலராக இருந்ததுஇன்று சருகாகியிருக்கலாம்அரும்பாமல் இருந்ததுமலர்ந்தும் இருக்கலாம்முள்ளாக இருந்தது கூடகொஞ்சம் முகம்மலர்ந்திருக்கலாம்!எதிர்பார்ப்புகளையேஎதிர்பார்க்கக் கூடாது!எதார்த்தமே என்றும்நிரந்தரமானது!— ரஜினிசெந்தில், கோவை..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !