இதப்படிங்க முதல்ல....
சர்வதேச பட விழாவில், ரேடியோ பெட்டி!பணி ஓய்வு பெற்ற தந்தைக்கும், நாகரிக மோகம் கொண்ட மகனுக்குமிடையே நடக்கும் பிரச்னையை சொல்லும் படம், ரேடியோ பெட்டி! ஹரி விஸ்வநாத் இயக்கியுள்ள இப்படம், டிசம்பர் மாதம், கோவாவில் நடைபெறவிருக்கும், இந்தியாவின், 46வது சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில், திரையிட தேர்வாகியுள்ளது. இப்படம், கடந்த மாதம், தென்கொரியாவில் நடைபெற்ற, 'புசான்' திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு, பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.—சினிமா பொன்னையா.பேயாக மாறிய லட்டு நடிகை!கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகாசிங், அதன்பின், வாலிப ராஜா என்ற படத்தில் நடித்தார்; அப்படம் இன்னும் ரிலீசாகாத நிலையில், பயம் ஒரு பயணம் என்ற திகில் படத்தில், பேய் வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது, சினிமாவில், பேய் சீசன் உருவாகியிருப்பதால், இவ்வேடத்தில் முத்திரை பதித்து விட வேண்டும் என்று, அந்த படத்துக்காக ரோப்பில் தொங்கியபடி, மிரட்டலாக நடித்து வருகிறார். காணாதவன் கஞ்சியைக் கண்டானாம்; ஓயாம ஓயாம ஊதிக் குடித்தானாம்!— எலீசாபாலிவுட் நடிகைகளுக்கு, 'ஷாக்' கொடுக்கும் அனுஷ்கா!முப்பது வயதை கடந்து விட்ட அனுஷ்காவுக்கு, திருமண ஆசை போய், பாலிவுட் சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதற்குமுன், சிங்கம் படத்தின் இந்தி ரீ - மேக்கில் அஜய் தேவ்கானுடன் நடிக்க வாய்ப்பு வந்த போது, கால்ஷீட் பிரச்னையால், அந்த படத்தை தட்டிக் கழித்த அனுஷ்கா, தற்போது, பாகுபாலி மற்றும் ருத்ரம்மா தேவி இந்தியா முழுக்க வெளியானதால், அந்த பெயரை பயன்படுத்தி, இந்தி இயக்குனர்களிடம், 'மூவ்' செய்து வருகிறார்.அனுஷ்காவின் இந்த திடீர் முயற்சி, பாலிவுட்டில் மையம் கொண்டுள்ள ஸ்ருதிஹாசன், தீபிகா படுகோனே மற்றும் கத்ரினா கைப் உள்ளிட்ட சில நடிகைகளுக்கு, பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காற்றுக்குத் தகுந்தாற் போல் பாயை மாற்றிக் கட்டு!— எலீசாநடிகர் - நடிகையர் சம்பளம் குறைக்கப்படுமா?சமீபகாலமாக, முன்னணி கதாநாயகர்கள், 25 முதல், 40 கோடி ரூபாய் வரையிலும், சில, 'ஹிட்' கொடுத்தவர்கள், 10 முதல் 15 கோடி ரூபாயும் சம்பளம் வாங்குகின்றனர். நடிகைகளின் சம்பளமும், கோடிக்கணக்கில் போய் விட்டது. இதன் காரணமாக, படத்தயாரிப்பு பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், படங்கள் ஓடாத போது, தயாரிப்பாளர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதால், 'படங்கள் ஓடவில்லை என்றால், நடிகர் - நடிகைகள் தாங்கள் வாங்கிய சம்பளத்தில், 20 சதவீதத்தை, தயாரிப்பாளருக்கு திருப்பிக் கொடுத்து விட வேண்டும்...' என்று, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டங்களில் பேசப்பட்டது.இருப்பினும், அது நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதனால், திரைப்படக் கூட்டுக் குழுவை கூட்டி, இது சம்பந்தமான முடிவை எடுப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் சட்டம், நடிகர் - நடிகையர் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!களவாணி நடிகைக்கு, சினிமாவுக்கு வெளியேயும், நிறைய ஆண் நண்பர்கள் உள்ளனர். இதனால், 6:00 மணிக்கு படப்பிடிப்பு முடிந்ததும், காரில் தனக்காக காத்துக் கொண்டிருக்கும் அவர்களுடன், 'பப்'புகளுக்கு சென்று, செம ஆட்டம் போடுகிறார். அதையடுத்து, புல் மப்பில் குடைசாய்ந்து விடும் நடிகையை, அவருடைய நண்பர்கள், நடுராத்திரியில் அவர் தங்கியிருக்கும் ஓட்டல் அறையில் விட்டு செல்கின்றனர்.கத்தி நடிகை, சமீபத்தில் வெளியான படத்தில், இரு கதாபாத்திரத்தில் நடித்திருந்ததைப் பார்த்த சிலர், அவர், 'ஓவர் ஆக்டிங்' கொடுத்திருப்பதாக, டென்ஷன் செய்து விட்டனர். இதனால், மனசொடிந்து போன நடிகை, ஒரு வாரம், தன் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என்று உலகம் சுற்றி, மனதை, 'ரிலாக்ஸ்' செய்து விட்டு திரும்பினார்.மெரினா நடிகரின் பாசறையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள, 'ஊதா கலரு ரிப்பன்' இப்போது, சிபாரிசுக்கு ஆள் இல்லாமல் தடுமாறிப் போய் நிற்கிறார். அம்மணியின் தடுமாற்றத்தைப் பார்த்த சில இளவட்ட கதாநாயகர்கள், இப்போது, அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். ஆனபோதும், வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடித்தால், 'இமேஜ்' போய் விடும் என்பதால், மேற்படி நடிகர்களை, தன் ஓட்டல் பில் கட்ட வைத்திருக்கும் நடிகை, சில, கமர்ஷியல் இயக்குனர்களுடன், ரகசிய மீட்டிங் நடத்தி வருகிறார்.சினி துளிகள்!* பிரபல நடிகர்களுடன், குத்து பாடல்களில் நடனமாட, சம்மதம் சொல்லி வருகிறார் ஓவியா.* தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா மார்க்கெட்டில் நயன்தாரா மற்றும் காஜல் அகர்வாலுக்கு, போட்டியாக வளர்ந்து வருகிறார் சமந்தா.* ஈட்டி படத்தில், முதன்முறையாக கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டுள்ளார் ஸ்ரீதிவ்யா.அவ்ளோதான்!