இதப்படிங்க முதல்ல...
அரசியல் சர்ச்சையில் விஜயசேதுபதி!விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணைய தளங்களில் மோதிக் கொள்வதைப் பார்த்து, நடிகர் விஜயசேதுபதி, 'ரசிகர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை விட்டு, ஏதாவது அரசியல் கட்சியில் சேருங்கள்...' என்று, 'அட்வைஸ்' செய்திருந்தார். விளைவு, விஜயசேதுபதி ஒரு கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக, ஒரு செய்தி, காட்டுத்தீயாய் பரவியது. இதனால், அதிர்ந்து போனவர், 'எந்த அரசியல் கட்சியிலும் நான் சேரவில்லை; அப்படியொரு எண்ணமும் எனக்கு இல்லை...' என்று, மறுப்பு செய்தி வெளியிட்டு, அரசியல் சர்ச்சையில் இருந்து தன் பெயரை விடுவித்துக் கொண்டார்.— சினிமா பொன்னையாதயாரிப்பாளர்களை இழுக்கும் அஞ்சலி!மாயா படத்தில் நயன்தாரா நடித்ததை அடுத்து, அதே பாணியில் ஒரு படத்தில் நடிக்க அவரை அணுகியபோது, மாயா படத்தின் வெற்றியை முன் வைத்து, இரு மடங்கு படக் கூலியை ஏற்றிய விவரத்தை சொன்னார். அதனால், காண்பது பொய் என்ற அந்த படவாய்ப்பு, தற்போது, அஞ்சலிக்கு போய் விட்டது. இப்படத்திற்காக, அவர், 50 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியிருக்கிறார். அத்துடன், நயன்தாராவுக்கான படங்களை, தன் பக்கம் இழுத்து விட வேண்டும் என்பதற்காக, நயன்தாராவின் கால்ஷீட்டுக்கு அலையும் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நயன்தாராவுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். உனக்கு ஆச்சு; எனக்கு ஆச்சு; பார்க்கிறேன் ஒரு கை!— எலீசாதமிழுக்கு வந்த மராட்டிய நடிகை!தில்லுக்கு துட்டு மற்றும் சர்வர் சுந்தரம் படங்களுக்காக தன் பாடி லாங்குவேஜை மாற்றியுள்ள சந்தானம், சில முன்னணி கதாநாயகிகளிடம் கால்ஷீட் கேட்டு வந்தார். ஆனால், வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயாவை கதாநாயகர்கள் யாருமே கண்டு கொள்ளாமல் விட்டது போல், தங்கள் நிலையும் ஆகிவிடக்கூடாது என்று, முன்னணி நடிகைகள் சந்தானத்துக்கு செவி சாய்க்கவில்லை. அதனால், இப்போது, வைபவி ஷன்டிலியா என்ற மராட்டிய நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளார்.— சி.பொ.,பேய் வேடத்தில் ராதாரவி!ஒரு காலத்தில், படங்களில் வில்லனாக மிரட்டி வந்தவர், நடிகர் ராதாரவி. சமீபகாலமாக குணசித்திர நடிகராகி விட்டார். பிசாசு, அரண்மனை - 2 மற்றும் இறுதிச்சுற்று உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், தற்போது, தெறி பட இயக்குனர் அட்லி தயாரிப்பில், ஜீவா மற்றும் ஸ்ரீதிவ்யா நடிக்கும், சங்கிலி புங்கிலி கதவ திற என்ற படத்தில், முதன்முறையாக பேய் வேடத்தில் நடிக்கிறார். வில்லன் நடிகரே பேயாக நடிப்பதால், அவரை அதிரடி பேயாக காண்பிக்க இருக்கின்றனர்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!ரம்மி நடிகையின் நட்பு வட்டாரம் விரிவடைந்து விட்டதால், ஏற்கனவே ஓருயிரும் ஈருடலுமாக இருந்த விஜயமான நடிகருடனான நெருக்கத்தை தற்போது குறைத்துள்ளார். இதனால், டென்ஷனான நடிகர், மேற்படி நடிகையை தன் கூடாரத்தில் இருந்து வெளியேற்றி, வேறு சில நடிகைகளுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.சீயான் நடிகர் இரு வேடங்களில் நடிக்கும் படத்திலிருந்து ஸ்வீட்கடை நடிகை நீக்கப்பட்டபோதும் அசராமல், பல முறை நடிகரை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தி, அவரது அடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி விட்டார். இந்த வாய்ப்பு தனக்கு கிடைக்க செய்தமைக்காக, மேற்படி நடிகருக்கு, ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்துள்ளார், நடிகை. சினி துளிகள்!* ஒரே நேரத்தில் எட்டு படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.* இருமுகன் படத்தில், சுரங்க வேலை செய்யும் தொழிலாளியாக நடிக்கிறார் விக்ரம்.* மாரி முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வாலே, அதன் இரண்டாம் பாகத்திலும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.அவ்ளோதான்!