இதப்படிங்க முதல்ல...
விரைவில் விஸ்வரூபம் - 2!விஸ்வரூபம் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அதே நடிகர் - நடிகையரை வைத்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடித்தார் கமல்; ஆனால், அப்படத்தை தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ், பைனான்ஸ் பிரச்னையில் சிக்கியதால், ஆண்டுக் கணக்கில் அப்படம் கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில், தற்போது, சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வரும் கமல், இப்படத்தை வெளியிடுவதற்கு முன், தீபாவளிக்கு விஸ்வரூபம் - 2 படத்தை வெளியிட்டு விடவேண்டும் என நினைத்து, தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.— சினிமா பொன்னையாமகளை சீரியல் நடிகையாக்கிய மாஜி நடிகை!தன்னைப் போலவே, தன் மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி நாயரை சினிமாவில் பெரிய நடிகைகளாக்க வேணடும் என்று கனவு கண்டார், மாஜி நடிகை ராதா. அதற்கேற்ப கார்த்திகாவை, கோ மற்றும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படங்களிலும், துளசியை, கடல் மற்றும் யான் போன்ற படங்களிலும் நடிக்க வைத்தார். ஆனால், அதையடுத்து, அவர்களுக்கு புதிய படங்களேதும் இல்லாமல், வீட்டிலேயே அடைந்து கிடக்கின்றனர். இதனால், தற்போது, மூத்த மகள் கார்த்திகாவை இந்தி, 'மெகா' சீரியலில் நடிக்க வைத்துள்ளார், ராதா. கிடைத்தா கஞ்சித் தண்ணி; கிடைக்காட்டி குழாய் தண்ணி!— எலீசா'டாட்டூ' வரைந்த ஓவியா!தமிழ் சினிமா நடிகைகளில், த்ரிஷா தான் முதுகு, கை மற்றும் கழுத்தின் கீழ்ப்பகுதி என, உடம்பின் பல இடங்களில், 'டாட்டூ' வரைந்துள்ளார். அவரை தொடர்ந்து, களவாணி பட நாயகி ஓவியாவும், தன் வலது கை தோள் பட்டையில்,'டாட்டூ' எனப்படும், பச்சை குத்தியுள்ளார்! ஐரோப்பாவிற்கு, 'டூர்' சென்ற போது, அந்த, 'டாட்டூ'வை வரைந்து கொண்டதாக, தன், 'டுவிட்டரில்' செய்தி வெளியிட்டுள்ளார். இன்னும் இருக்கிறது, தேருக்குள் சிங்காரம்!—எலீசாவாரிசு நடிகர்களை அறிமுகம் செய்யும் பாரதிராஜா!தன் மகன் துருவை சினிமாவில் இறக்கி விடுவதற்காக நேரம் பார்த்திருந்தார், விக்ரம். இச்சேதி அறிந்த பாரதிராஜா, தான் இயக்கும் புதிய படத்தில், விக்ரமின் மகன் துருவ் மற்றும் இயக்குனர் வசந்தின் மகன் ரித்விக் வருண் ஆகிய இருவரையும் அறிமுகம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். தங்கள் மகன்கள் மோதிர கையால் குட்டு வாங்கப்போகின்றனர் என்பதால், மேற்படி இரண்டு தந்தையரும் உற்சாகத்தில் உள்ளனர்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!வாசனை காமெடியன் கதாநாயகனாக வெற்றி பெற்றதை அடுத்து, அவருடன் ஏற்கனவே நட்பு வளர்த்து வந்த சில கதாநாயகர்கள், நெருக்கத்தை குறைத்து விட்டனர். அத்துடன், 'நம்முடன் காமெடியனாக நடித்தவர், நம்மையெல்லாம் மிஞ்சி, பெரிய கதாநாயகனாகி விடுவார் போலிருக்கே...' என்று ஆளாலுக்கு புகைச்சலை வெளிப்படுத்தி வருகின்றனர்.தாரா நடிகை, மூன்றாவதாக காதலித்து வரும் இயக்குனர், அம்மணியை காண்பதற்காக படப்பிடிப்பு தளங்களுக்கு, 'விசிட்' அடிக்கிறார். அவரைக் கண்டதும்,மனம் விட்டு பேசத் துவங்கும் நடிகை, 'டேக்' தயாராகி விட்டதாக உதவி இயக்குனர்கள் சொன்ன பின்னும், இயக்குனருடனான பேச்சை துண்டிக்காமல், பேசியபடி இருக்கிறார். இதனால், மேற்படி இயக்குனர், நடிகையை காண, ஸ்பாட்டுக்கு, 'விசிட்' அடித்தாலே, அந்த படங்களின் இயக்குனர்கள் செம கடுப்பாகி விடுகின்றனர்.வம்பு நடிகருடன், மீண்டும் கோலிவுட்டில், 'என்ட்ரி' கொடுத்துள்ள சிவாஜி கேர்ள், தன் முந்தைய நட்பு வட்டார இயக்குனர்களின் கதவுகளை தட்டி வருகிறார். அத்துடன், அவர்களது நள்ளிரவு விருந்துகளுக்கும் அழையா விருந்தாளியாக சென்று, தனக்கு கைகொடுக்குமாறு அவர்களிடம் அன்பு வேண்டுகோள் வைத்து, 'அழுத்தம்' கொடுக்கிறார். அம்மணியின் அழுத்தம், இன்ப அதிர்ச்சி கொடுப்பதால், சில அழுத்தக்கார இயக்குனர்கள் கூட, நடிகையின் பக்கமாக திரும்பியுள்ளனர்.சினி துளிகள்!* சர்வர் சுந்தரம் படத்தை அடுத்து, செல்வராகவன் இயக்கத்தில், சீரியஸ் கதையில் உருவாகும் படத்தில் நடிக்கிறார், சந்தானம்.* ஆக் ஷன் கதாநாயகியாகி விட்ட நயன்தாரா, கிளாமராக நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்.* அன்பாவன் அசராதவன் அடங்காதவன் படத்தை அடுத்து, புதிய படங்களுக்கான வேட்டையில் இறங்கியுள்ளார், ஸ்ரேயா.அவ்ளோதான்!