இதப்படிங்க முதல்ல...
ஹாலிவுட்டுக்கு செல்லும் அரவிந்த்சாமி!தனி ஒருவன் படத்தையடுத்து, போகன் படத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி, டியர் டாட் என்ற இந்தி படத்தில், பாசக்கார அப்பாவாக நடித்தார். இந்நிலையில், விரைவில், ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கயிருக்கும் அரவிந்த்சாமி, அதற்காக, லண்டன் சென்று, தன் எடையை குறைத்து, 'பாடி லாங்குவேஜை' மாற்றி வருகிறார்.— சினிமா பொன்னையாஅபிமான நாயகியுடன் ஜெய்!ஜெய் - அஞ்சலி இணைந்து நடித்த, எங்கேயும் எப்போதும் படம், சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து, சில காலம், காதலர்களாக சுற்றித் திரிந்த அவர்கள், பின்னர் பிரிந்து விட்டனர். இருப்பினும், தற்போது தான் நடிக்கும், திகில் படத்தில் நடிக்க, அஞ்சலிக்கு அழைப்பு விடுத்துள்ளார், ஜெய். அவர் கேட்ட அதே தேதியில், வேறொரு தெலுங்கு படம் இருந்த போதும், ஜெய் விரும்பி கேட்டதால், தெலுங்கு பட தயாரிப்பாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அந்த கால்ஷீட்டை, ஜெய் படத்துக்கு கொடுத்துள்ளார், அஞ்சலி.— சி.பொ.,அமெரிக்காவில் படமாகும் கவுதம்மேனன் படம்!தான் இயக்கிய, வேட்டையாடு விளையாடு மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற படங்களை, முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கியவர், கவுதம்மேனன். இந்நிலையில், அடுத்தபடியாக நான்கு மொழிகளில் தான் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பையும், அமெரிக்காவில் தான் இயக்கவிருக்கிறார். அப்படத்தின் தமிழ்ப்பதிப்பில் சந்தானமும், தெலுங்கில் சாய் தரம் தேஜாவும், கன்னடத்தில் புனித் ராஜ்குமாரும், மலையாளத்தில் ப்ருத்விராஜும் நடிக்க, நாயகிகளாக அனுஷ்கா மற்றும் தமன்னா நடிக்கின்றனர். — சி.பொ.,சுயசரிதை படத்தில் சன்னிலியோன்!பாலிவுட் நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை கதையை, இந்தியில், இயக்குனர் அபிஷேக் வர்மா இயக்குகிறார். இப்படத்தில், சன்னிலியோன் வேடத்தில் அவரே நடிக்க, காதலராக, அவரது கணவர், டேனியேல் வெப்பர் நடிக்கிறார். இப்படத்தில், சன்னிலியோனின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களே அதிகமாக இடம் பெறுகிறது. அதற்காக, தான் எழுதி வைத்திருந்த, தன்னை பற்றிய தொகுப்புகளை, இயக்குனர் அபிஷேக் வர்மாவிடம் கொடுத்துள்ளார், சன்னிலியோன்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!பீட்சா நடிகருடன் இணைபிரியா தோழியாக இருந்து வந்த காக்கா முட்டை பட நடிகையை, தற்போது, மேற்படி நடிகர் கண்டுகொள்வதே இல்லை. சில மேல்தட்டு நடிகைகளே அவரது பாசறையை நோக்கி படையெடுப்பதால், பழைய பால் நடிகருக்கு புளித்து விட்டது. இதனால், நடிகர் மீது கோபத்தில் இருக்கும் காக்கா முட்டை நடிகை, சினிமாவில் நீடிக்க வேண்டுமென்றால், இளவட்ட நடிகர்களின் அரவணைப்பு வேண்டுமென்பதால், சில புதியவர்களை, தன் அன்புப் பிடிக்குள் இழுக்கும் முயற்சியில் தீவிரமடைந்துள்ளார்.அகர்வால் நடிகை, எந்த நடிகர்களுடன் பழகினாலும், விட்ட குறை தொட்ட குறையாக பழகுவதில்லை. நகமும், சதையுமாக ஒட்டி உறவாடி விடுகிறார். அது மட்டுமின்றி, பாலிவுட் சினிமா பக்கமாக ஏதாவது வேலை விஷயமாக, நம்ம ஊர் கதாநாயகர்கள், 'விசிட்' அடிப்பதை கேள்விப்பட்டால், அவர்களை தன், 'கெஸ்ட் ஹவுசு'க்கு அழைத்துச் சென்று, அன்பு மழை பொழிகிறார்.சினி துளிகள்!* காக்கா முட்டை படம் போன்று, இந்தியில், டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.* கருடா படத்தில், முதன்முறையாக விக்ரமுடன் ஜோடி சேருகிறார், காஜல்அகர்வால்.* செல்வராகவனின், நெஞ்சம் மறப்பதில்லை படத்தில், வில்லி வேடத்தில் நடிக்கிறார், அட்டகத்தி நந்திதா.* சிம்பு நடிக்கும், அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில், சிம்புக்கு அம்மாவாக நடிக்கிறார், ஸ்ரேயா.அவ்ளோதான்!