உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

மணிரத்னம் இயக்கும் பீரியட் பிலிம்!தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் 7 ஆம் அறிவு, வசந்தபாலன் அரவாண் ஆகிய பீரியட் படங்களை எடுத்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து, மணிரத்னமும், 15ம் நூற்றாண்டில் நடந்த ஒரு கதை பின்னணியில் அடுத்த படத்தை இயக்குகிறார். அதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. — சினிமா பொன்னையா.அஞ்சலி போடும் திடீர் கண்டிஷன்!அங்காடித் தெரு படத்துக்குப் பிறகு, பிரபல ஹீரோக்களின் படங்கள் அஞ்சலிக்கு கிடைக்கவில்லை. என்றாலும், பிரபல ஹீரோக்களுடன் நடிக்கும் நடிகைகள் அளவுக்கு தன் படக்கூலியை உயர்த்தி விட்டார். அதோடு, ஸ்பாட்டில் தனக்கு கேரவன், ஸ்டார் ஓட்டல் உணவுகள் என்று தடபுடல் கவனிப்புகள் வேண்டும் என்றும் கண்டிஷனாக பேசுகிறார். ஆலே பாலே என்று அலம்பிக் கொண்டிருக்கிறது! — எலீசா.நதியா விடும் தூது!கதாநாயகிகள் அளவுக்கு சம்பளம் கேட்டதால், நதியாவை நிராகரித்து விட்டது கோடம்பாக்கம். இருப்பினும், சினிமாவை விடுவதாக இல்லை அவர். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து கொண்டே, சில முன்னணி இயக்குனர்களுக்கு தூது விட்டு வருகிறார். கூடவே, 'குறைவான கூலியில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறேன்...' என்றும் முன்மொழிந்து வருகிறார். தும்பை விட்டு விட்டு வாலை பிடிப்பது போல! -- எலீசா.நீது சந்திரா எதிர்பார்ப்பு!தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்த நீது சந்திரா, இப்போது, அமீர் இயக்கத்தில் நடித்து வரும் ஆதிபகவன் படம், தனக்கு, 'பிரேக்' தரும் என்று நம்புகிறார். காரணம், பருத்தி வீரனில் ப்ரியாமணிக்கு கொடுத்தது மாதிரியே இப்படத்தில் நீதுவுக்கும் வெயிட் ரோல். தான் நினைத்தது மாதிரியே இப்படம் வெற்றி பெற்றால், அடுத்து இந்தியை விட தமிழுக்கே முன்னுரிமை கொடுக்கப் போவதாக கூறுகிறார். நினைத்தது எல்லாம் நடந்து விடுமா? — எலீசா.அமலா பால் கட்டுப்பாடு!மைனா படத்தின் வெற்றி, அமலா பாலை முன்னணி ஹீரோக்களின் கவனத்துக்கு கொண்டு வந்து விட்டது. அதன் விளைவாக, சில முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றியுள்ள அமலா, கவர்ச்சிக்கு தொடர்ந்து கட்டுப்பாடு விதித்து வருகிறார். அதே சமயம், தன் படக்கூலியை 40 லட்சத்துக்கு தடாலடியாக உயர்த்தி விட்டார். கரும்பு உள்ள போதே ஆலை ஆட்டிக் கொள்! — எலீசா.ஆர்யா மாஸ்டர் பிளான்!நயன்தாரா, ஸ்ரேயாவைத் தொடர்ந்து, இனி, தன் ஒவ்வொரு படங்களிலும் முன்னணி நடிகைகள்தான் தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார் ஆர்யா. இதனால், தன் புதிய படமொன்றிற்கு சமீரா ரெட்டியை, 'புக்' பண்ண ஆர்டர் போட்டுள்ள ஆர்யா, அதன்பிறகு நடிக்கவுள்ள படங்களுக்கு அனுஷ்கா, தமன்னா, இலியானா போன்ற பிரபல நடிகைகளை ஜோடி சேர்க்கும் திட்டமும் வைத்துள்ளார். — சி.பொ.,மீண்டும், 'சென்னையில் ஒரு மழைக்காலம்!'கவுதம் மேனன் ஏற்கனவே இயக்கி, பின்னர் கிடப்பில் போடப்பட்ட படம், 'சென்னையில் ஒரு மழைக்காலம்!' அப்படத்தை, 'நடுநிசி நாய்கள்' படத்தின் ரிலீசுக்குப் பிறகு மீண்டும் துவங்குகிறார் கவுதம். முன்பு நடிக்கவிருந்த த்ரிஷா உள்ளிட்டோரை ஏறக்கட்டிவிட்டு, இப்போது, 'மதராசப்பட்டணம்' எமி ஜாக்ஸன், 'பாணா காத்தாடி' சமந்தா ஆகியோரை நாயகிகளாக, 'புக்' பண்ணியுள்ளார். — சி.பொ.,முன்னணி ஹீரோக்களின் படங்களில் மட்டுமே...முன்னணி ஹீரோக்களின் படங்கள்... அடுத்து, சிங்கிள் ஹீரோயினாக மட்டுமே நடிப்பது என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. யாராவது பிரபல இயக்குனர்களே தேடி வந்து, 'இரண்டு நாயகிகளில், உனக்கே முக்கிய கேரக்டர்...' என்று சொன்னாலும், அதை ஏற்பதில்லை ஹன்சிகா. 'விஜய்யின், வேலாயுதம் படம் மட்டும் இதில் விதிவிலக்கு...' என்கிறார். புதிதாய் வந்த சேவகன் நெருப்பாய் கட்டி வீசுகிறான்! - எலீசா.கந்தசாமி சாயலில் கிருஷ்ண லீலை!கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரித்துள்ள கிருஷ்ண லீலை படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் மறுத்து வரும் நிலையில், அப்படத்துக்கு ஐங்கரன் பிலிம்சுடன் ஒரு பிரச்னை உள்ளது. இதையெல்லாம் கடந்து படத்தை திரைக்கு கொண்டு வரும்போது இன்னொரு பிரச்னை... அதாவது, ஏற்கனவே திரைக்கு வந்த கந்தசாமி படத்தின் சாயலில், இப்படத்தின் கதை உள்ளதாம். ஆக, பல பிரச்னைகளில் சிக்கியுள்ளது கிருஷ்ண லீலை! - சினிமா பொன்னையா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !