இதப்படிங்க முதல்ல...
சர்வதேச திரைப்பட விழாவில், ஜோக்கர்!ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான, ஜோக்கர் படம், திரைக்கு வந்த பின்பும், பல்வேறு, சர்வதேச திரைப்பட விழாக்களில், திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற, 14வது சர்வதேச திரைப்பட விழாவில், இப்படம் திரையிடப்பட்டு, சிறந்த படமாக தேர்வாகி, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.— சினிமா பொன்னையாபழிவாங்கும் நயன்தாரா!மாயா படத்தை தொடர்ந்து, இமைக்கா நொடிகள் படத்திலும், அம்மாவாக நடிக்கிறார், நயன்தாரா. இப்படத்தில், அதர்வா நாயகனாக நடித்த போதும், நயன்தாராவை சுற்றி தான் கதை பின்னப்பட்டுள்ளது. அவ்வகையில், ஏற்கனவே நடித்த, அனாமிகா படத்தை போன்று, இப்படத்திலும் அதிரடியான, பழி வாங்கும் வேடத்தில், நடிக்கிறார். உளுவைக் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா?— எலீசாமீரா ஜாஸ்மின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ்!லிங்குசாமி இயக்கத்தில், விஷால் நடித்த, சண்டக்கோழி படத்தில், நாயகியாக நடித்தார், மீரா ஜாஸ்மின். தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில், கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். மீரா ஜாஸ்மினைப் போன்றே, குடும்ப பாங்காக இருப்பதால், அவருக்கு, இவ்வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள லிங்குசாமி, 'இப்படம், கீர்த்தி சுரேஷை புதிய கோணத்தில் வெளிப்படுத்தும்...' என்கிறார். வேலைக்குத் தகுந்த வேஷம்!— எலீசாகாயத்ரி ரகுராம் படத்தில் பாடிய தனுஷ்!சார்லி சாப்ளின் மற்றும் ஸ்டைல் உட்பட சில படங்களில், நாயகியாக நடித்தவர், நடன மாஸ்டர் காயத்ரி ரகுராம். சமீபகாலமாக, நடன மாஸ்டராக பணியாற்றி வரும் இவர், தற்போது, யாதுமாகி நின்றாய் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், தன், 'ஆல் டைம் பேவரிட்' பாடகரான, நடிகர் தனுஷை, ஒரு பாடல், பாட வைத்துள்ளார்.— சி.பொ.,கதை தேடலில் அருந்ததி நாயர்!சைத்தான் படத்தில், விஜய் ஆண்டனியின் மனைவியாக நடித்த அருந்ததி நாயர், அப்படத்தில், 45 மற்றும் 55 வயது தோற்றத்தில், நடித்திருந்தார். தொடர்ந்து, அழுத்தமான, 'பர்பாமென்ஸ்' கொடுக்க கூடிய, கதைகளாக தேடும் அவர், கதாநாயகனை விட, கதைக்கே, முக்கியத்துவம் கொடுக்க போவதாக கூறி, இளவட்ட இயக்குனர்களை அழைத்து, தீவிரமாக கதை கேட்டு வருகிறார். ஊதின சங்கு ஊதினால் விடிகிற போது விடியட்டும்!— எலீசாநெகடீவ் இமேஜை தவிர்க்கும் சமுத்திரகனி!மலையாள படங்களில், அதிரடி வில்லனாக நடித்து வரும், இயக்குனர், சமுத்திரகனி, தமிழில், வில்லனாக நடிக்க விரும்பவில்லை. 'என் மீது நல்லதொரு பாசிட்டீவ், 'இமேஜ்' விழுந்துள்ளது; அதை காத்துக் கொள்ளும் வகையிலான வேடங்களில் தான் நடிப்பேன்...' என்று கூறும் அவர், தற்போது, தான் இயக்கி, நடித்து வரும், தொண்டன் படத்தில், சமூக ஆர்வலராக, நடித்து வருகிறார்.—சினிமா பொன்னையாகறுப்புப் பூனை!* மேடி நடிகர், பீட்சா நடிகருடன், ஒரு படத்தில் நடிக்கிறார். ஆனால், இப்படத்தில், பீட்சா நடிகரின் மார்க்கெட்டை கருத்தில் வைத்து, மேடியை, 'டம்மி' செய்திருந்தனர். அதை கண்டறிந்த நடிகர், தன் மனக்கசப்பை வெளிப்படுத்தியதை அடுத்து, தற்போது, அவருக்கு, கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், மேடிக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், படம், திரைக்கு வரும் போது, தன்னை, இரண்டாவது நாயகனாக்கி விடுவரோ என்கிற அச்சமும் தற்போது ஏற்பட்டுள்ளது.* மறுபிரவேசம் செய்துள்ள பால் நடிகை, மூன்று, 'மெகா' படங்களை கைப்பற்றியிருப்பதுடன், மேல்தட்டு நடிகர்களை, தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக, 'வீக் எண்ட் பார்ட்டி'களை முடுக்கி விட்டுள்ளார். அம்மணியின், இந்த தாராள குணம், கோலிவுட்டில், காட்டு தீயாக பரவியதை அடுத்து, பார்ட்டியில், துண்டு போட்டு இடம் பிடிக்க, போட்டி போடுகின்றனர், கோலிவுட் அன்பர்கள்.சினி துளிகள்!* விக்ரம் வேதா படத்தை தொடர்ந்து, களவாணி பட இயக்குனர், சற்குணம் இயக்கும் படத்தில் நடிக்கிறார், மாதவன்.* திருட்டுப்பயலே படத்தின், இரண்டாம் பாகத்தில், மாளவிகா நடித்த வேடத்தில் நடிக்கிறார், அமலாபால்.அவ்ளோதான்!