உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

விஜயின் இருமொழிப்படம்!ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு நடித்து வரும், ஸ்பைடர் திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளிலும் நேரடியாக உருவாகும் நிலையில், தொடர்ந்து, அவரது இயக்கத்தில், விஜய் நடிக்கும் புதிய படமும், தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தில், ஸ்பைடர் படத்தில் நடித்து வரும், ராகுல் பிரீத்சிங் மற்றும் எமிஜாக்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.— சினிமா பொன்னையாராகுல் ப்ரீத்சிங்கின் எதிர்கால திட்டம்!தமிழில், தடையறத் தாக்க மற்றும் புத்தகம் போன்ற படங்களில் நடித்த ராகுல் ப்ரீத் சிங், தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார். அத்துடன், தமிழிலும் முன்னணி நடிகையாகும் முயற்சியில் இறங்கியிருப்பவர், துப்பறிவாளன் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் நடிக்கிறார். மேலும், அவரை, சில கமர்ஷியல் இயக்குனர்கள், கவர்ச்சி கதாநாயகியாக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, அதற்கு தடை போட்டதுடன், 'அனுஷ்கா மாதிரி பர்பாமென்ஸ் நடிகையாக வேண்டும் என்பது தான், என் லட்சியம்...' என்று, 'டயலாக்' பேசி, அவர்களை திருப்பி அனுப்பி விடுகிறார். எட்டாளம் போனாலும் கிட்டாதது எட்டாது!— எலீசாசம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!தமிழில், விஜயுடன், பைரவா படத்தில் நடித்த, கீர்த்தி சுரேஷுக்கு, அப்படம் எதிர்பார்த்தபடி, வெற்றியை கொடுக்காததால், அவரது சம்பளம், 50 லட்சத்தை தாண்டவில்லை. ஆனால், தெலுங்கில், தற்போது, மூன்று படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தன் சம்பளத்தை, ஒரு கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார். அத்துடன், தமிழை போன்று, கவர்ச்சியில் கட்டுப்பாடு விதிக்காமல் நடிப்பதால்,தெலுங்கு தயாரிப்பாளர்கள், அவர் கேட்ட தொகையை கொடுக்க, முன் வந்துள்ளனர். இதே சம்பளத்தை, அடுத்து தமிழில் ஒப்பந்தமாகும் புதிய படங்களில் அமல்படுத்த உள்ளார். வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்!— எலீசாதலா, ஐந்து கோடி ரூபாய்!தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு, 36 கோடி ரூபாய் செலவாகும் என கூறப்படும் நிலையில், நடிகர் சங்க செயலர், விஷால் மற்றும் பொருளாளர், கார்த்தி ஆகிய இருவரும் தங்கள் சார்பில், தலா, ஐந்து கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். அவ்வகையில், தற்போது, தாங்கள் இணைந்து நடிக்கும், கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தின் சம்பளம் துவங்கி, இன்னும் சில படங்களில் நடிக்கும் சம்பளத்தையும், நடிகர் சங்க கட்டடம் கட்ட கொடுக்கப்போவதாக கூறியுள்ளனர்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!காஞ்சனா நடிகருடன் நடித்த படம், தன்னை, கோலிவுட்டின் பிரதான நடிகையாக்கும் என்று எதிர்பார்த்த, டார்லிங் நடிகையின் கனவை, அப்படம் தோல்வியடைந்து, கலைத்து விட்டது. அத்துடன், 'அந்த படத்திற்கு பின், என் சம்பளம், 40 லட்சம்...' என, கோலிவுட்டில் டமாரமடித்து வந்த நடிகையை, இப்போது கண்டுகொள்வாரே இல்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த நடிகை, 'நீங்களா பாத்து கொடுக்கிற துட்டில், நடிக்க தயாரா இருக்கிறேன்...' என்று, சில தயாரிப்பாளர்களுக்கு, மாறி மாறி அன்புத் தொல்லை கொடுத்து வருகிறார்.அஞ்சான் நடிகையை, தன் படத்தில் நடிக்க வைத்தே ஆக வேண்டும் என்ற வெறியில் இருந்து வந்த, மெரினா நடிகர், தற்போது, 'பேக்' அடிக்கிறார். 'நடிகைக்கு, விரைவில் திருமணமாக இருப்பதால், அவருக்கான மவுசு இறங்கி விடும்...' என்று கருதும் அவர், ரெமோ நடிகை பக்கம் திரும்பியுள்ளார். ஆனால், ஏற்கனவே, அஞ்சான் நடிகைக்கு, முன் பணம் கொடுத்து விட்டதால், என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறி நிற்கிறார், சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளர்.சினி துளிகள்!* மரகத நாணயம் படத்தில், காமெடி நாயகியாக நடித்துள்ளார், நிக்கி கல்ராணி.* வேலைக்காரன் படத்தில், மில் தொழிலாளியாக நடிக்கிறார், சிவகார்த்திகேயன்.* புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, கேரளாவை சேர்ந்த, சுபத்ரா என்ற, 68 வயது ரசிகையை நேரில் சந்தித்து, நலம் விசாரித்துள்ளார், மலையாள நடிகர் மோகன்லால்.* இசையமைப்பாளர்கள், விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி.பிரகாஷ் போன்றோர், கதாநாயகர்களாக ஆகிவிட்ட நிலையில், இசையமைப்பாளர் பரணி, ஒண்டிக்கட்ட என்ற படத்தை இயக்கியுள்ளார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !