உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல....

அரசியல் கோதாவில் ரோஜா - வாணி விஸ்வநாத்!ஆந்திராவிலுள்ள, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்று, நகரி தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருக்கும் நடிகை ரோஜா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அதனால், ரோஜாவுக்கு எதிராக ஒரு நடிகையை கட்சியில் இறக்க, அஞ்சலியை அழைத்தார் சந்திரபாபு நாயுடு; சினிமாவில் பிசியாக இருப்பதால், அவர் தயங்கவே, தற்போது, வாணி விஸ்வநாத்தை தன் கட்சியில் இணைத்து, ரோஜாவுக்கு எதிரான பிரசாரத்தில் இறக்கி விட திட்டமிட்டுள்ளார், சந்திரபாபு நாயுடு.— சினிமா பொன்னையாநிவேதா பெத்துராஜ்க்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த பிரபல நடிகர்கள்!ஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ். அதையடுத்து, பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்தவர், தற்போது, ஜெயம் ரவியுடன், டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், 'நான் நடித்து வரும் படங்களில், எனக்கு நல்ல பெயர் கிடைக்கும்...' என்று கூறும் நிவேதா, 'அதற்கு காரணம், என்னுடன் நடித்த, பார்த்திபன் மற்றும் ஜெயம் ரவி போன்றோர், அவ்வப்போது, எனக்கு நடிப்பு பயிற்சி கொடுத்துள்ளனர். கேமரா முன் வரும் போது, சிறப்பாக நடித்து கை தட்டல் பெறும் அளவுக்கு நடித்திருக்கிறேன்...' என்கிறார். இடிக்கிறவன் ஒன்றை நினைத்துக் கொண்டு இடித்தால், குடிக்கிறவன் ஒன்றை நினைத்துக் கொண்டு குடிப்பான்!— எலீசாகேத்ரின் தெரசாவுக்கு பாடி பிட்னஸ் பயிற்சி!மெட்ராஸ் மற்றும் கடம்பன் படங்களில் நடித்துள்ள, கேத்ரின் தெரசா, 'ஒருபோதும் கிளாமர் காட்ட மாட்டேன்...' என்று, தில்லாக கூறி வந்தார். அதனால், பட வாய்ப்புகள் படிப்படியாக குறைந்து விடவே, தற்போது, தெலுங்கில், கோபிசந்துடன் நடித்து வரும், கவுதம் நந்தா என்ற படத்தில் நீச்சல் உடையணிந்து நடித்துள்ளார். மேலும், நீச்சல் உடையில், தன் உடலமைப்பு அழகாக வெளிப்பட வேண்டும் என்பதற்காக, இரண்டு மாதங்களாக பாடி பிட்னஸ் பயிற்சியும் எடுத்துள்ளார். எண்ணெய் பூசி, மண்ணில் புரண்டாலும், ஒட்டுவது தானே ஒட்டும்!— எலீசாபில்லா - 3 படத்தில் அஜித்தா, சிம்புவா?பில்லா படத்தில் ரஜினி நடித்தார். ஆனால், பில்லா -2வில் அஜித் நடித்தார். தற்போது, அஜித்திற்காக, பில்லா -3 படத்திற்கான கதையை தயார் செய்துள்ளார், இயக்குனர், விஷ்ணுவர்தன். அதேபோல், இயக்குனர் வெங்கட்பிரபுவும், பில்லா -3 என்றொரு கதையை சிம்புவுக்காக தயார் செய்து வைத்துள்ளார். அஜித் நடிக்கவில்லையென்றால், உடனடியாக, சிம்பு நடிக்கும், பில்லா -3 படத்தை இயக்கப் போவதாகவும், மாறாக, அஜித் அப்படத்தில் நடித்தால், தன் கதைக்கு வேறு பெயர் வைக்க இருப்பதாகவும் கூறுகிறார், வெங்கட்பிரபு.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!பால் நடிகைக்கு, நாளுக்கு நாள் பாய் பிரெண்டுகள் அதிகரித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் எல்லாம் சென்னை மற்றும் கேரளா வாசிகள் அல்ல; மும்பை, டில்லியை சேர்ந்தவர்கள். அதேபோல், அவர்களை சந்திக்க, அடிக்கடி அவுட்டோர் செல்லும் நடிகை, அங்கு வாரக்கணக்கில் அவர்களுடன் கும்மாளம் போட்டு, சத்தமில்லாமல் கேரளா திரும்பி விடுகிறார். சினி துளிகள்!* ஜெய் - அஞ்சலி நடித்துள்ள, பலூன் படம், ரிலீசுக்கு தயாராகிறது.* யோகா மற்றும் நீச்சல் பயிற்சி தான், அமலாபாலின் முக்கிய பொழுதுபோக்கு.* துப்பறிவாளன் படத்தில், விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார், அனு இமானுவேல்.* அஞ்சாதே படத்தை அடுத்து, திருட்டுப்பயலே இரண்டாம் பாகத்தில், வில்லனாக நடித்துள்ளார், பிரசன்னா.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !