இதப்படிங்க முதல்ல...
மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!விக்ரம் ஏற்கனவே நடிக்கயிருந்த, கரிகாலன் என்ற சரித்திர படம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது, மகாவீர் கர்ணா என்ற மெகா சரித்திர படத்தில் நடிக்கிறார். ஆர்.எஸ்.விமல் இயக்கும் இப்படம், 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக தயாராகும் இப்படம், 32 உலக மொழிகளிலும், 'டப்' செய்யப்படவுள்ளது.— சினிமா பொன்னையாமீண்டும் நிவேதா தாமஸ்!பாபநாசம் படத்தில், கமலின் மூத்த மகளாக நடித்தவர், நிவேதா தாமஸ், அதன்பின், தெலுங்கில் கதாநாயகியாகி விட்ட அவர், ஜூனியர், என்.டி.ஆருடன் நடித்த, ஜெய் லவகுசா படத்திற்கு பின், நடிப்புக்கு இடைவெளி விட்டு, கல்லுாரி படிப்பை தொடர சென்று விட்டார். இருப்பினும், 'கூடிய சீக்கிரமே கல்லுாரிக்கு லீவு போட்டு, மீண்டும் சினிமாவுக்கு வந்து விடுவேன்; தமிழ் மற்றும் தெலுங்கு என, இரண்டு மொழிகளிலும் கதாநாயகியாக பெரும் கலக்கு கலக்காமல் ஓயமாட்டேன்...' என்கிறார். இட்டப்படியே ஒழிய, ஆசைப்பட்டு பலன் இல்லை!— எலீசாரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!கடந்த, 1982ல், கே.பாக்யராஜ் இயக்கி, நடித்த படம், துாறல் நின்னு போச்சு; தற்போது, இப்படத்தை, நடிகர் சசிகுமாரை வைத்து, ரீ-மேக் செய்கிறார், பாக்யராஜ். அப்படத்தில் நடித்த நம்பியார் வேடத்திற்கு, ஒப்பந்தமாகியுள்ளார், ராஜ்கிரண். அதே பழைய கதையை, இன்றைய கால கட்டத்திற்கேற்ப சில திருத்தங்களை செய்து, படமாக்க உள்ளார், பாக்யராஜ்.— சி.பொ.,சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!மெர்சல் படத்தில், ஜி.எஸ்.டி., குறித்த வசனங்களை பேசி, நடித்து சர்ச்சைகளை சந்தித்த விஜய், தப்போது, தன், 62வது படத்தில், விவசாயியாக நடிக்கிறார். விவசாயிகளுக்கு இன்று இருக்கும் அனைத்து பிரச்னைகளையும் இப்படத்தில் கொண்டு வந்துள்ள விஜய், விவசாயிகள் விஷயத்தில், அரசாங்கம் எப்படி பாராமுகம் கொண்டுள்ளது என்பதை, சில காட்சிகளில் பேசி, நடித்து வருகிறார். அதனால், 'இந்தப் படம் திரைக்கு வரும்போது, சர்ச்சைகளை உருவாக்கும்...' என்கின்றனர்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!பீட்சா நடிகர் படத்தில் நடித்த கன்னட நடிகை, தமிழில் மெகா ரவுண்டு வரவேண்டுமென்று கோடம்பாக்கத்தில் முகாமிட்டார். ஆனால், 'எங்க அப்பா பெரிய ராணுவ அதிகாரி; நான், பெரிய இடத்துப் பெண்...' என்று ஏகப்பட்ட, 'பில்டப்'களை அம்மணி கொடுத்ததால், அவரை யாருமே ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இதனால், போணியாகாமல் கிடக்கிறார்.சினிமாவில் என்ட்ரி கொடுத்த போது குட்டை பாவாடை நடிகையாக வலம் வந்த நான்கெழுத்து மும்பை நடிகை, மார்க்கெட் சூடு பிடித்ததும் இழுத்து போர்த்திக் கொண்டார். ஆனால், இப்போது மார்க்கெட் சரிந்து கிடப்பதால், மறுபடியும் குட்டை பாவாடை கலாசாரத்தை கையில் எடுத்திருப்பவர், சினிமா வட்டாரங்களில் உள்ள நரைமுடி தயாரிப்பாளர்களை, 'கிளு கிளு'ப்பேற்றி புதிய படங்களுக்காக அஸ்திவாரம் போட்டு வருகிறார்.சினி துளிகள்!* முன்வரிசை கதாநாயகர்கள் தனக்கு சிபாரிசு செய்வதை நிறுத்தி விட்டபோதும், அவர்களுடனான நட்பை தொடர்ந்து வருகிறார், ஹன்சிகா* விக்ரம் வேதா பட நாயகியான ஸ்ரத்தா ஸ்ரீநாத், தமிழில் படங்கள் கிடைக்காததால், பாலிவுட்டிற்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.* காலா படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்துள்ள ஈஸ்வரிராவ், கோலிவுட்டில் புதிய படங்களில் நடிக்க, கதை கேட்டு வருகிறார்.* பாகுபலி 2 படத்தை அடுத்து, பிரபாஸ் நடித்து வரும், சாஹோ படமும், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என, மூன்று மொழிகளில் தயாராகிறது.அவ்ளோதான்!