உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

கமலின் இளமை கூட்டணி!கடந்த, 22 ஆண்டுகளுக்கு முன், கமல் நடித்த, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. அந்த படத்தையும், இயக்குனர் ஷங்கரே இயக்குகிறார். மேலும், இந்தியன் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். இரண்டாம் பாகத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். அதேபோல், முதல் பாகத்திற்கு, வைரமுத்து பாடல்கள் எழுதினார். இரண்டாம் பாகத்திற்கு, தாமரை பாடல் எழுதுகிறார். இவர்கள் மட்டுமின்றி, இன்னும் சில இளம் கலைஞர்களும் இந்த படத்தில் இணைகின்றனர். இந்தியன் 2ல் இளசுகளுடன் கூட்டணி அமைக்கிறார் கமல்.— சினிமா பொன்னையாகிச்சன் கில்லாடியான நமீதா!சில மாதங்களுக்கு முன், வீரா என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதா, திருமணத்திற்கு பின் நடிப்பை தொடர்ந்து வருகிறார். அதோடு, கணவருக்கு தன் கையாலே தினமும் சமைத்து கொடுத்து வருவதாக கூறும் நமீதா, சப்பாத்தி, சப்ஜி, சிக்கன், முட்டை மற்றும் புல்கா என பல உணவுகளை தானே சமைப்பதாகவும் சொல்கிறார். மேலும், தனக்கு தெரியாத விஷயங்களை குஜராத்தில் இருக்கும் அம்மாவிடம் போனில் கேட்டு கேட்டு சமைத்து வருவதாகவும் சொல்கிறார். சமையல் பாகம் தெரிந்தவளுக்கு உமையவள் பாகம் உள்ளங்கையில்! — எலீசாஅஞ்சலியின் மிரட்டல் படம்!காளி படத்தை அடுத்து, பேரன்பு மற்றும் நாடோடிகள்2 படங்களில் நடித்து வரும் அஞ்சலி, அடுத்தபடியாக, லிசா என்ற படத்தில் நடிக்கிறார். ஹாரர் கதையில் உருவாகும் இந்த படம் இந்தியாவின் முதல், ஸ்டெரோஸ்கோபிக் 3டி தொழில் நுட்பத்தில் உருவாகிறது. அதனால், 'இதுவரை வெளியான பேய் படங்களை விட, இந்த படம் படு மிரட்டலாக இருக்கும்...' என்கின்றனர்.அடி சக்கை, பொடி மட்டை!— எலீசாகோலிவுட்டில் முகாமிடும், காலா பட நாயகி!ரஜினியுடன், கபாலி படத்தில் நாயகியாக நடித்த ராதிகா ஆப்தேவுக்கு, அதன்பின் தமிழில் யாரும் பட வாய்ப்புகள் கொடுக்கவில்லை. ஆனால், தற்போது ரஜினியின், காலா படத்தில் நாயகியாக நடித்துள்ள இந்தி நடிகை ஹூமா குரோசி, இந்த படத்தில் நடித்து வந்தபோதே, சில தமிழ்ப்பட இயக்குனர்களை அணுகி, படவேட்டை நடத்தி வந்தார். ஓரிரு இயக்குனர்கள் அவருக்கு பச்சை கொடி அசைத்திருக்கின்றனர். அதனால், அடுத்து, தமிழில் ஒரு மெகா ரவுண்டு வரவேண்டும் என்று கோலிவுட்டில் முகாமிட தயாராகி வருகிறார். அலை மோதும்போதே கடலாட வேண்டும்!— எலீசாஆட்டோ டிரைவரான சாய் பல்லவி!தனுஷுடன், மாரி2 படத்தில், நாயகியாக நடிக்கும் சாய் பல்லவி, இந்த படத்தில் ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். அவர், தனக்கு தெரிந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம், 10 நாட்கள் பயிற்சி எடுத்து, அதன்பின் ஆட்டோ ஓட்டும் காட்சிகளில் நடித்து வருகிறார். ஆட்டத்துக்கு தகுந்த மேளம்; மேளத்துக்கு தகுந்த ஆட்டம்!— எலீசாஅரசியலில் குதிக்க தயாராகும் கஸ்துாரி!சமீபகாலமாக நாட்டு நடப்புகளை தன் டுவிட்டரில் வெளியிட்டு, சர்ச்சைகளை சந்தித்து வருபவர் நடிகை கஸ்துாரி. இந்நிலையில், 'ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்திருப்பதை, வரவேற்பதாக சொல்லும் கஸ்துாரி, நானும் நாட்டில் நடப்பதை வெளியில் நின்று வேடிக்கை பார்க்க விரும்பவில்லை. அதனால், சரியான சந்தர்ப்பம் அமையும்போது அரசியலில் குதிப்பேன்...' என்கிறார் கஸ்துாரி.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!சில படங்களின் தொடர் தோல்வி காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார், பிச்சைக்காரன் நடிகர். அதையடுத்து, 'இனிமேல் யாராக இருந்தாலும், கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன். அதனால், நட்பை முன் வைத்து யாரும் என் வீட்டுப் பக்கம் வராதீர்கள்...' என்று தன்னை முற்றுகையிட்ட நட்பு வட்டார இயக்குனர்களை விரட்டியடித்து விட்டார் பிச்சைக்காரன்.பாலிவுட்டில் இருந்து இறக்குமதியாகியுள்ள, வனமகன் நடிகை, ஒரே நேரத்தில் மூன்று முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி கோலிவுட் நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். அதோடு, பாடல் காட்சிகளில் ஏராளமான கவர்ச்சி காட்டி அம்மணி நடிப்பதால், கோலிவுட்டின் கமர்ஷியல் படாதிபதிகள், நடிகைக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துள்ளனர்.சினி துளிகள்!* கடைக்குட்டி சிங்கம் படத்தில், கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார் சாயிஷா சாய்கல்.* நயன்தாரா நடித்து வரும், கோலமாவு கோகிலா என்ற படத்திற்காக, சிவகார்த்திகேயனும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். 'கல்யாண வயசு...' என்று துவங்கும் அந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார், அனிருத்.* காளி படத்தை அடுத்து, திமிரு புடிச்சவன் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !