இதப்படிங்க முதல்ல....
விக்ரம் பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!இயக்குனர் விஜய் இயக்கத்தில், விக்ரம் நடித்து வந்த படத்திற்கு, முதலில், தெய்வ மகன் என்று பெயர் வைத்தனர். ஆனால், அந்த டைட்டிலில், ஏற்கனவே சிவாஜி கணேசன் நடித்த படம் ஒன்று இருப்பதால், அந்த டைட்டிலை மீண்டும் பயன்படுத்த எதிர்ப்புகள் எழுந்தன. அதனால், இத்தனை நாளும் டைட்டில் குறித்து, அமைதி காத்து வந்த அப்பட நிறுவனம், இப்போது, தெய்வத் திருமகன் என்று பெயர் சூட்டி இருக்கிறது. மேலும், சிவாஜிக்கு ஒரு தெய்வமகன் என்றால், விக்ரமுக்கு தெய்வத் திருமகன் என்றும், விக்ரமின் நடிப்பை மெச்சுகிறது அப்படக் குழு.— சினிமா பொன்னையா.தாப்ஸி கொடுத்த அதிர்ச்சி!கோ படத்திற்கு பிறகு, கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள மாற்றான் படத்தை, அதிரடியாக கைப்பற்றியிருக்கிறார் தாப்ஸி. இதனால், அப்படத்தில் இடம் பெற திரைக்குப் பின்னால் வரிந்து கட்டி அலைந்த அனுஷ்கா, தமன்னா, ஹன்சிகா ஆகியோர் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலவு காத்த கிளி போல!— எலீசா.ஸ்ரீகாந்த் ஆர்வம்!காதல், ஆக்ஷன் என்று ஸ்ரீகாந்த் நடித்த படங்கள் பெரிய அளவில், 'ரீச்' ஆகாததால், எதிரி எண் 3 என்ற படத்தில், த்ரில்லருக்கு மாறி உள்ளார். இதையடுத்து, இன்னும் வித்தியாசமான கதைகளை தேடி வரும் ஸ்ரீகாந்த், பருத்தி வீரன் போன்று வில்லேஜ் கதைகளில் நடிக்கவும் தான் ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார்.— சி.பொ.,ஏ.ஆர்.ரஹ்மான் புத்தகம் வெளியீடு!இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆன்மிக ஈடுபாடு, இசைப்பயணம் ஆகியவற்றை தொகுத்து எழுதப்பட்ட, 'ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்பிரிட் ஆப் மியூசிக்' என்ற புத்தகம், விற்பனைக்கு தயாராகி விட்டது. நஸ்ரீன் முன்னி கபீர் என்பவர் எழுதியுள்ள இந்நூலின் வெளியீட்டு விழா, மும்பையில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் பல இந்தி சினிமாவினர் கலந்து கொள்ள, தமிழ் சினிமாவிலிருந்து மணிரத்னம் மட்டுமே கலந்து கொள்கிறார். — சி.பொ.,* சிங்கம் படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிக்க, ஒன்றரை கோடி ரூபாய் கேட்டதால், அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்திய இந்திப்பட நிறுவனம், அவரை, 'கட்' பண்ணிவிட்டு, காஜல் அகர்வாலை, 'கமிட்' பண்ணி விட்டது.காமெடி வேடத்தில் நடிகர் ஜெயராம்! 'டிவி' நடிகர் வேணு அரவிந்த் இயக்கியுள்ள, சபாஷ் சரியான போட்டி படத்தில், ஜெயராம், நடிகர் ஜெயராமாகவே நடித்துள்ளார். படத்தில், அவரது கேரக்டர் என்ட்ரி ஆனதிலிருந்து, செம காமெடியாக இருக்குமாம். அதனால், தமிழ்நாட்டைப் போலவே, கேரளத்துக்கும் அதிக பிரின்ட் போட்டு, படத்தை ஓட வைக்க திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார் இயக்குனர்.— சி.பொ.,அனுஷ்கா புதிய டெக்னிக்!தமிழில் வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர்களை, தெலுங்கு தயாரிப்பாளர்களிடம் அறிமுகம் செய்வது, தெலுங்கில் வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர்களை தமிழ்ப்பட தயாரிப்பாளர்களிடம் அறிமுகம் செய்வதுமாக சமீப காலமாக புது தொழில் யுக்தியை கையாள்கிறார் அனுஷ்கா. அப்படி, தான் சிபாரிசு செய்யும் இயக்குனர்களுக்கு, படம் இயக்கும் சான்சு கிடைத்து விட்டால், அதில் தானே ஹீரோயினாகவும் ஒட்டிக் கொள்கிறார். அனுஷ்காவின் இந்த டெக்னிக், இந்தி சினிமா வரை பரவத் தொடங்கியுள்ளது. அறிவு உடையார் ஆவது அறிவார். — எலீசா.லேட்டஸ்ட் ஸ்டைலில் ஸ்ருதி ஹாசன்!ஏற்கனவே தான் நடித்த இந்தி லக் படத்தில், தனக்குத்தானே காஸ்டியூம் டிசைனராக செயல்பட்ட ஸ்ருதி ஹாசன், தற்போது, தமிழில் நடித்துள்ள, ஏழாம் அறிவு படத்திலும் தனக்காக லேட்டஸ்ட் பேஷன் ஸ்டைலில் காஸ்டியூம் டிசைன் செய்து, அசத்தியிருக்கிறார். அவரது நியூ பேஷன் மாடல்களைப் பார்த்து, கோலிவுட்டின் புரொபஷனல் காஸ்டியூமர்ஸ் சிலர், ஸ்ருதியை வெகுவாக பாராட்டியுள்ளனர். அந்த அளவுக்கு ஹாலிவுட் ரேஞ்சுக்கு டிசைன் பண்ணியிருக்கிறார். — எலீசா.அரபு நாட்டில் ஷேக் வீடுகளில் இந்திய பெண்கள், வேலைக்காக செல்லும் போது ஏற்படும் செக்ஸ் கொடுமைகள் பற்றி, மலையாளத்தில் ஒரு படம் தயாராகிறது. அந்த மாதிரியான ஒரு பெண் கேரக்டரில், காவ்யா மாதவன் நடிக்கிறார்.சாமியின் அடுத்த இறக்குமதி!உயிர், சிந்து சமவெளி போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய சாமி, அடுத்து இயக்கும் படம், சித்திரம்! இந்தப் படத்தில் நடிக்க, பிரபல ஹீரோக்கள் சிலரை அணுகினார். ஆனால், விவகாரமான படமாகத்தான் இதுவும் இருக்கும் என்று, யாரும் சாமியின் பிடிக்குள் சிக்கவில்லை. அதனால், இப்போது, வெளுத்துக்கட்டு படத்தில் நடித்த கதிரை, அப்படத்தில் நாயகனாக்கியுள்ள சாமி, நாயகியாக இந்தி நடிகை சஞ்சிதா படுகோனை தமிழுக்கு இறக்குமதி செய்துள்ளார்.— சினிமா பொன்னையா.அவ்ளோதான்!