இதப்படிங்க முதல்ல...
ஆர்யாவை வில்லனாக்கிய சாயிஷா!திருமணத்திற்கு முன் வரை, யாராவது தன்னை வில்லனாக நடிக்க அழைத்தால், 'என்னை பார்த்தால், வில்லன் மாதிரியா தெரியுது...' என்று, அவர்களுக்கு வில்லனாகி விடுவார், ஆர்யா. இப்போது அவரது மனைவி சாயிஷா, 'பாசிட்டீவ், நெகடீவ் என, கலந்து நடித்தால் தான், நடிப்பில் உச்சம் பெற முடியும்...' என்று, அவரை மூளைச் சலவை செய்து, விஷால் நடிக்கும் புதிய படத்தில், வில்லன் வேடத்தில் நடிக்க வைத்துள்ளார். ஆக, மனைவி வருவது வரை, 'ஹீரோ'வாக மட்டுமே இருந்து வந்த, ஆர்யா, இப்போது, வில்லனாகவும் உருவெடுத்துள்ளார்.— சினிமா பொன்னையா'சேனல்' துவங்கிய, ரம்யா நம்பீசன்!புதுமுக நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க தயாரானபோதும், ரம்யா நம்பீசனுக்கு பட வாய்ப்பு கொடுக்க, யாரும் முன்வரவில்லை. அதனால், சினிமாவை நம்பி காலம் தள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து, தற்போது, ஒரு, 'யு -டியூப் சேனல்' துவங்கியுள்ளார். அதில், பாடல், நடனம், கலைநிகழ்ச்சி என, பதிவிடப் போவதாக தெரிவித்துள்ளார். ஆக, பல சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், 'சேனல்' துவங்கி வந்த நிலையில், தற்போது ஒரு முன்னணி, நடிகையும், 'யு -டியூப் சேனல்' துவங்கி விட்டார். கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்! —எலீசாவேதிகாவின், 'ஹாட் மச்சி ஹாட்!'தான் நடித்த படங்களில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த, வேதிகாவிற்கு, தற்போது, மார்க்கெட் குறைந்து விட்டது. அதனால், சரிந்த மார்க்கெட்டை துாக்கி நிறுத்தும் முயற்சியாக, சமீபத்தில், மும்பையில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவிற்கு சென்ற, வேதிகா, படுகவர்ச்சியான உடையணிந்து, அனைவரையும் சூடு காட்டி, சுண்டியிழுத்துள்ளார். விளைவு, அந்த விழாவுக்கு வந்திருந்த, ஒரு கமர்ஷியல் பட இயக்குனர், 'ஸ்பாட்'டிலேயே, தன் படத்திற்கு, வேதிகாவை ஒப்பந்தம் செய்து விட்டார். எல்லா வித்தையும் கால் வயிற்று கூழுக்குத்தான்!— எலீசாதனுஷுக்கு, 'ஷாக்' கொடுத்த, சிவகார்த்திகேயன்!சிம்புவும், தனுஷும், போட்டி நடிகர்களாக இருந்து வந்த நிலை மாறி, இப்போது, தனுஷும்,- சிவகார்த்திகேயனும், எதிரும் புதிருமான போட்டியாளர்களாகி விட்டனர். இந்நிலையில், தனுஷுக்காக, அவர் அண்ணன், செல்வராகவன், டாக்டர்ஸ் என்றொரு, தலைப்பை பதிவு செய்து வைத்திருந்தார். இந்த விஷயம் வெளியில் கசிந்ததை அடுத்து, தான் நடிக்கும் புதிய படத்திற்கு, அதிலிருந்து ஒரு எழுத்தை மட்டும் குறைத்து, டாக்டர் என்ற, தலைப்பை வைத்து, தனுஷுக்கு, செம, 'ஷாக்' கொடுத்து விட்டார், சிவகார்த்திகேயன். சி.பொ.,பிரியாமணியின் துணிச்சல்ஜெயலலிதா வாழ்க்கை கதையில் உருவாகி வரும், தலைவி படத்தில், ஜெ.,வாக, கங்கனா ரணாவத் நடிக்க, அவரது தோழி, சசிகலாவாக நடிக்க மறுத்து விட்டார், சாய் பல்லவி. இதையடுத்து, வேறு சில நடிகையரை நாடினர். சர்ச்சைக்குரிய வேடமாக இருக்கும் என்று, யாருமே ஒத்துக்கொள்ளாத நிலையில், தற்போது, சசிகலா வேடத்தில் நடிக்க முன் வந்துள்ளார், பிரியாமணி. அதோடு, கதாபாத்திரத்திற்கு தேவையான அனைத்து காட்சிகளிலும், தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்த, தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். படுவது மட்டும் பட்டத்துக்கு இருக்க வேண்டும்!— எலீசாகறுப்புப்பூனை!ஒரு காலத்தில், மிகப்பெரிய இயக்குனராக இருந்தவர், முருங்கைக்காய் பார்ட்டி. ஆனால், அவரது மகனை ஒரு நடிகராக உருவாக்க முடியவில்லை. விளைவு, தற்போது, ஓரிரு, 'ஹிட்' படங்களை கொடுத்த இளவட்ட இயக்குனர்களை தொடர்பு கொண்டு, மகனை வைத்து படம் இயக்குமாறு கேட்டு வருகிறார். அதோடு, 'ஒரு காலத்தில், கல்லை கூட சிற்பமாக்கியவன் நான். இப்போது, என் மகனை, என்னால் சிற்பமாக்க முடியவில்லையே...' என்று புலம்பி திரிகிறார்.தொழிலாளர் இருவர்:'ஏம்பா... நம்ம பட்டறையில் வேலை பார்த்தாரே, பாக்யராஜ், தன் பணி ஓய்வுக்கு பின், மகனை, இங்கு வேலைக்கு சேர்த்தாரு... அப்பாவோ, வேலையில், 'கில்லி'யாக இருப்பார்; அவருகிட்ட தானே நாமே வேலை கத்துக்கிட்டோம். தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி, 16 அடி பாயும்ன்னு சொல்வாங்க. ஆனா, பாரு... அந்த பையன், ஒரு வேலைக்கும் தகுதி இல்லாம இருக்கான்... என்னவோ... அவர் தலையெழுத்து...' என்று, புலம்பினர். சினி துளிகள்!* விஜய் நடிக்கும், 64வது படத்தில், ஒரு கேரக்டரில் நடிக்கிறார், கே.பாக்யராஜின் மகன், சாந்தனு.அவ்ளோதான்!