இதப்படிங்க முதல்ல...
த்ரிஷாவுக்கு வந்த, அரசியல் ஆசை!சினிமாவில் கடந்த, 20 ஆண்டுகளாக நடித்து வரும் த்ரிஷா, தனுஷுடன், கொடி படத்தில், அரசியல்வாதியாக நடித்திருந்தார். பதவி ஆசையில், காதலர் தனுஷையே கொலை செய்து விடுவார். அப்படியொரு கொடூரமான அரசியல்வாதியாக நடித்த, த்ரிஷாவுக்கு, தற்போது, நிஜமாலுமே அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்ற ரோஜா, தற்போது, ஆந்திர அரசியலில் அமைச்சராகி விட்டார். அதுபோன்று, விஜயசாந்தி, குஷ்பு, கவுதமி மற்றும் நமீதா போன்றோர், பா.ஜ.,வில் இணைந்துள்ளனர். இந்நிலையில், தானும் ஒரு தேசிய கட்சியில் இணைய வேண்டும் என்பதற்காக, முக்கிய தலைவர்களுக்கு துாது விட்டுள்ளார். த்ரிஷாவை எந்த கட்சி அரவணைக்கப் போகிறதோ, பொறுத்திருந்து பார்ப்போம்.— சினிமா பொன்னையாபகத் பாசிலுக்கு வந்த மவுசு!மலையாள நடிகர், பகத் பாசில், தமிழில், வேலைக்காரன் மற்றும் சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் ஏற்கனவே நடித்த போதும், சமீபத்தில் வெளியான, விக்ரம் படம் தான், அவரை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. குறிப்பாக, இப்படத்தில் அவர் நடித்துள்ள, அமர் என்ற கேரக்டர் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதனால், 'விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்திலும் கண்டிப்பாக என்னை நடிக்க வைக்க வேண்டும்...' என்று, இப்போதே அப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம், 'டீல்' போட்டு விட்டார். அதோடு, 'தெலுங்கில், அல்லு அர்ஜுனுடன் நடித்த, புஷ்பா படமும், உச்சபட்ச நடிகர் ஆக்கிவிட்டதால், இனிமேல், மலையாள படங்களை குறைத்து, தமிழ்,- தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறேன்...' என்கிறார், பகத் பாசில்.சி.பொ.,'ஷாக்' கொடுத்த, இயக்குனர்!தெலுங்கில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடித்த, புஷ்பா படம், அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. அப்படத்தில் அவர் நடித்த, வள்ளி என்ற கேரக்டரை, அவரது செல்லப் பெயராக தெலுங்கு ரசிகர்கள் அழைக்கத் துவங்கினர். இதனால், புஷ்பா படத்தின், இரண்டாம் பாகத்தை இன்னும் பெரிதாக எதிர்பார்த்தார், ராஷ்மிகா மந்தனா.ஆனால், இரண்டாம் பாகத்தில், சில காட்சிகளுடன், ராஷ்மிகா நடிக்கும் கேரக்டர் கொல்லப்படுவதாக ஒரு தகவலை அவருக்கு கூறி இருக்கிறார், இயக்குனர் சுகுமார். இதனால், பலத்த அதிர்ச்சி அடைந்த, ராஷ்மிகா, 'நான், புஷ்பா- 2 படத்தை, பெரிய அளவில் எதிர்பார்த்தேன். என் கேரக்டரின் கதையை இப்படி முடித்து விட்டீர்களே...' என சொல்லி, கண்கலங்கி விட்டார்.— எலீசாஆச்சரியப்படுத்திய, ரசிகர்கள்!மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான, மஞ்சுவாரியர், தமிழில், அசுரன் படத்தில், தனுஷின் மனைவியாக நடித்திருந்தார். தற்போது, அஜீத்தின் 61வது படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் உள்ள பலரும், மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த படங்களை சுட்டிக்காட்டி, அவரது நடிப்பை பெருமையாக பேசி வருவதுடன், அவுட்டோர் படப்பிடிப்புகளில் அவரைப் பார்க்கும் ரசிகர்கள், அவருடன், 'செல்பி' எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதைப் பார்த்து, 'தமிழ்நாட்டில் எனக்கு இவ்வளவு ரசிகர் கூட்டம் உள்ளதா?' என்று, ஆச்சரியப்படுகிறார், மஞ்சு வாரியர். தொடர்ந்து, தமிழ் படங்களில் கவனம் செலுத்தி, மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்க கோலிவுட்டில், தீவிர பட வேட்டையையும் முடுக்கி விட்டுள்ளார்.— எலீசாஇளசுகளை துவம்சம் பண்ண வரும், சமந்தா!தெலுங்கில், விஜய் தேவரகொண்டா உடன் நடித்து வரும், குஷி என்ற படத்தில், புதுவரவு நடிகையருக்கே சவால் விடும் வகையில், கவர்ச்சி புயலாக உருவெடுத்துள்ளார், சமந்தா. அத்துடன், இந்த படத்தில், 'லிப்லாக் சீன்' மட்டுமின்றி, கிளுகிளுப்பான படுக்கை அறை காட்சிகளிலும் நடித்து, இளசுகளை துவம்சம் செய்யப் போகிறாராம். முக்கியமாக, இந்த படத்தில், சில விவகாரமான காட்சிகளில் நடிப்பதற்கு, வளர்ந்து வரும் தெலுங்கு நடிகையர் மறுத்து விட்ட நிலையில், இந்த வாய்ப்பு, சமந்தாவிற்கு சென்றுள்ளது. இதுகுறித்து சமந்தா கூறுகையில், 'நடிக்க வேண்டும் என்று வந்த பிறகு, இயக்குனர்கள் கோடு போட்டால், நாம் ரோடு போட வேண்டும். இப்படி, ஆரம்பத்திலேயே சில படங்களில் நடித்து தான், நான் மார்க்கெட்டை பிடித்தேன். அதனால், அதே பழைய பார்முலாவை தான் இந்தப் படத்திலும் பின்பற்றி இருக்கிறேன். இது, விமர்சனத்துக்கு உள்ளானாலும் எனக்கு கவலையில்லை. என் கதாபாத்திரத்திற்கு நான் உண்மையாக இருக்கிறேன். அவ்வளவுதான்...' என்று, அசால்டாக கூறுகிறார்.— சினிமா பொன்னையாசினி துளிகள்!* தன் தந்தையின் இரண்டாவது மனைவியான, ராதிகாவை, ஆன்ட்டி என்று தான் அழைக்கிறார், வரலட்சுமி சரத்குமார். அவரிடம், 'அம்மா என்று அழைத்தால் என்ன...' என்று கேட்டால், 'அம்மா என்றால் அது ஒருவர் மட்டுமே. ஆதலால், எல்லாரையும் அம்மா என்று அழைக்க முடியாது...' என்கிறார்.* இதுவரை ரஜினி, கமல் மற்றும் அஜித்தை வைத்து படங்கள் இயக்கிய சுந்தர்.சி, 'அடுத்து, விஜயை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறேன். அவருக்காக காமெடி கலந்த ஒரு கதையை தயார் செய்து வருகிறேன்...' என்கிறார்.* பாபிசிம்ஹா தயாரித்து நடித்து வரும், தடை உடை என்ற படத்தில், நடிகர் செந்தில் மற்றும் அவரது மகன் மணிகண்ட பிரபு ஆகிய இருவரும், அப்பா - மகனாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.அவ்ளோதான்!