இதப்படிங்க முதல்ல...
இங்கிலாந்தில், விஜய் செய்த சாதனை!லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும், லியோ படம், அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே, இங்கிலாந்தில் டிக்கெட் விற்பனையை துவங்கியுள்ளனர். அங்கு, ஒரே நாளில், 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகி, சாதனை செய்துள்ளது. அந்த வகையில், இங்கிலாந்தில், வெளியீடு தேதிக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே, முன்பதிவுகளை துவங்கிய முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை, லியோ படம் பெற்றுள்ளது.— சினிமா பொன்னையாஆதங்கப்படும், கியாரா அத்வானி!தற்போது, ராம்சரண் நடிப்பில், ஷங்கர் இயக்கும், 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார், பாலிவுட் நடிகை, கியாரா அத்வானி. இவர், நடிகையரின் சம்பள விஷயத்தில் மட்டும், தயாரிப்பாளர்கள் முரண்டு பிடிப்பதால் ஆதங்கப்படுகிறார். 'சமீபகாலமாக, 'ஹீரோ'களை போலவே, 'ஹீரோயின்'களுக்கும், ரசிகர் வட்டம் உள்ளது. பெரிய மார்க்கெட் இருக்கிறது. அதோடு, 'ஹீரோ'களுக்கு இணையாக, 'ஹீரோயின்'களும், 'ஆக் ஷன்' உள்ளிட்ட அனைத்து அதிரடி காட்சிகளிலும் உயிரைக் கொடுத்து நடிக்கிறோம். 'இருப்பினும், சம்பளம் என்று வருகிறபோது, 'ஹீரோ'வுக்கு, 50 கோடி கொடுப்பவர்கள், அவர்களுக்கு இணையாக நடிக்கும் அதே படத்தின், 'ஹீரோயி'னுக்கு இரண்டு கோடி கொடுப்பதற்கே தயங்குகின்றனர். இந்த பாகுபாடு பார்க்கும் சாபக்கேடு, சினிமாவிலிருந்து கூடிய சீக்கிரம் மாற வேண்டும்...' என்று, தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார், கியாரா அத்வானி.எலீசாரசிகர்களுக்காக, 'வெயிட்' போட்ட, அஞ்சலி!தற்போது, ஈகை என்ற படத்தில், கதையின் நாயகியாக நடித்து வரும், நடிகை அஞ்சலி, முன்பை விட, கூடுதல் எடையுடன் காணப்படுகிறார். காரணம் கேட்டால், 'என் பெருவாரியான ரசிகர்களுக்கு, 'வெயிட்' போட்ட அஞ்சலியை தான் அதிகம் பிடித்துள்ளது. 'தற்போது, நான் கனமான கதாபாத்திரங்களாக நடிப்பதால், இந்த உடல்கட்டு இருந்தால் தான், பொருந்தும். இனிமேல் இதே, 'தளதள' உடம்பை, 'மெயின்டெய்ன்' பண்ணப் போகிறேன்...' என்கிறார், அஞ்சலி.எலீசாஓராண்டு தள்ளிப்போன, இந்தியன் - 2ஷங்கர் இயக்கத்தில், கமல் நடித்துள்ள, இந்தியன் - 2 படப்பிடிப்பு, துவக்கத்திலிருந்து ஏகப்பட்ட தடை தாமதங்களை, சந்தித்து வந்தது. இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே, மோதல் ஏற்பட்டு, அந்த படம் சில காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதையடுத்து, நீதிமன்றத்துக்கும் சென்றனர். பின்னர் மறுபடியும், இந்தியன் - 2 படப்பிடிப்பு துவங்கி, தற்போது முடிந்துள்ளது. அமெரிக்காவில், இப்படத்தின், 'அனிமேஷன்' பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பணிகள் முடிவதற்கு, இன்னும் ஓராண்டு ஆகுமாம். அதனால், அடுத்த ஆண்டு ஆகஸ்டில் தான், இந்தியன் - 2 திரைக்கு வரும் என்ற தகவல்கள், தற்போது வெளியாகியுள்ளன.சினிமா பொன்னையாகறுப்புப் பூனை!பாலிவுட்டில் கொடி நாட்டிய பிறகு, தன்னோடு நடிக்கும் தெலுங்கு, 'ஹீரோ'களை, வாரிசு பட நடிகை, மதிப்பதே இல்லையாம். இதன் காரணமாக, சமீபத்தில், தெலுங்கு சினிமாவில், இரண்டெழுத்து, 'ஹீரோ' தன் படத்தில், ஒப்பந்தமான இந்த நடிகையை துாக்கிவிட்டு, வேறு நடிகையை ஒப்பந்தம் பண்ணி விட்டார்.இதையடுத்து, 'என்னை, படத்தில் ஒப்பந்தம் செய்துவிட்டு, துாக்கியதால், எனக்கு கொடுத்த 'அட்வான்சை' ஒருபோதும் திரும்ப தர மாட்டேன்...' என்று, படக்குழுவுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்துள்ளார், வாரிசு பட நடிகை. சினி துளிகள்!* தமிழில் கடைசியாக, விஜயுடன், வாரிசு படத்தில் நடித்த, ராஷ்மிகா மந்தனா, தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும், ரெயின்போ என்ற படத்தில், நடித்து வருகிறார்.* திருச்சிற்றம்பலம் படத்தை அடுத்து, தனுஷ் இயக்கி நடிக்கும், அவரது, 50தாவது படத்திலும், நாயகியாக நடிக்கிறார், நித்யா மேனன்.அவ்ளோதான்!