உள்ளூர் செய்திகள்

இதப் படிங்க முதல்ல...

கோலிவுட் நடிகர் - நடிகைகளுக்கு- புதிய கட்டுப்பாடு!வியாபார நோக்கத்தோடு நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களில், நடிகர் - நடிகைகள் கலந்து கொள்ள, நடிகர் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது, அந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, 'நடிகர் - நடிகைகளுக்கு உரிய சன்மானம் கிடைக்க வேண்டும். அப்படியில்லையேல் நடிகர் சங்கத்தின் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டும். இரண்டுமே இல்லாதபட்சத்தில் மற்றவர்களின் லாபத்துக்காக, நடிகர் - நடிகைகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்...' என்று நடிகர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.— சினிமா பொன்னையாஇலியானா வைக்கும் நிபந்தனை!கேடி மற்றும் நண்பன் படங்களில் நடித்த இலியானா, பின், இந்திக்கு சென்று பிரபலமானார். இப்போது அங்கு படங்கள் குறைந்து விட்டதால், மீண்டும் தமிழுக்கு வர ஆசைப்படுகிறார். அதனால், சில முன்னணி இயக்குனர்களை சந்தித்து படவேட்டை நடத்தி வரும் அவர், 'இந்தி படங்களில் நடிப்பதைப் போன்று, 'பிகினி' நடிகையாக பிரவேசிக்கிறேன். அதனால், இந்தி படங்களுக்கு இணையாக தமிழிலும் சம்பளம் தந்து விட வேண்டும்...' என்றொரு நிபந்தனை வைத்து வருகிறார். ஆனால், 'இந்தியில் அவருக்கு பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டது என்பதால் அதே சம்பளத்தை எப்படி தமிழ்ப் படத்தில் கொடுக்க முடியும்...' என்று இலியானாவை பரிசீலனையிலேயே வைத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை!— எலீசாநயன்தாராவை அசர வைத்த அஜித்!பைக் ரேஸ் பிரியரான அஜித்குமாருக்கு, குட்டி விமானங்கள் பறக்க விடுவது பொழுது போக்காக இருந்து வந்தது. ஆனால், இப்போது, அவர், போட்டோகிராபராகவும் உருவெடுத்துள்ளார். படப்பிடிப்புக்கு செல்லும்போது, அவுட்டோர்களின் இயற்கை அழகை, போட்டோ எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் நடித்து வரும், விஸ்வாசம் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் நடந்தபோது, அங்குள்ள இயற்கை அழகு சூழ்ந்த பகுதிகளில், நயன்தாராவை விதவிதமாக போட்டோ எடுத்து, அதை ஒரு ஆல்பமாக போட்டு கொடுத்து, அசத்தியுள்ளார்.— சி.பொ.,விஜயசேதுபதி பெருமிதம்!காலா படத்தை அடுத்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கும் விஜயசேதுபதி, படத்தின் கதை என்ன-, அதில், எந்த மாதிரியான வேடம் என எதுவுமே கேட்கவில்லையாம். அதுகுறித்து, இயக்குனர் கார்த்தி சுப்பராஜ், விஜயசேதுபதியிடம் கேட்டபோது, 'சின்ன வயதில் இருந்தே, ரஜினியை திரையில் மட்டுமே பார்த்து வருகிறேன். இப்படம் மூலம் அவரை நேரில் பார்த்து, பழகும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது. இப்படியொரு அரிய வாய்ப்பு கிடைக்கும்போது, எந்த மாதிரியான வேடம் என்றாலும் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்...' என்று கூறியுள்ளார்.- சி.பொ.,உருட்டல் மிரட்டல் வில்லி வரலட்சுமி!படையப்பா படத்தில், நீலாம்பரியாக நடித்த ரம்யாகிருஷ்ணனின், வில்லி நடிப்புக்கு பின், திமிறு படத்தில் வில்லியாக நடித்த, ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பு பேசப்பட்டது. அந்த வரிசையில், இப்போது வரலட்சுமியும் இணைந்துள்ளார். விஷால் நடித்துள்ள, சண்டக் கோழி-2 படத்தில், 'வரலட்சுமியின் ஆவேசமான வில்லி நடிப்பு, இன்னும் பல ஆண்டுகளுக்கு கோலிவுட்டில் பேசப்படும்...' என்கின்றனர். அந்த அளவுக்கு உருட்டல் மிரட்டல் என்று கலக்கியிருக்கிறாராம் வரலட்சுமி.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!மூத்த நடிகர்களுடன், 'டூயட்' பாட வேண்டும் என்றால், தான் வழக்கமாக வாங்கும் படக் கூலியிலிருந்து இரு மடங்கு வேண்டும் என்கிறார் தாரா நடிகை. இதே சம்பளத்தை தெலுங்கு மெகா நடிகரின் படத்தில் நடிப்பதற்கும் அம்மணி கேட்டதால், நடிகை மீது அவர் செம கோபத்தில் இருக்கிறார்.மெரினா நடிகருடன் ஆரம்ப காலத்தில் நடித்த சில நடிகைகள், அவருடன் நடிக்க சிபாரிசு கோரி துரத்தி வந்தனர். ஆனால், இந்த, 'டார்ச்சர்' அதிகரித்ததால், தற்போது, தன் மொபைல் நம்பரை மாற்றி, அதை ரகசியமாக பாதுகாத்து வருகிறார் நடிகர். சினி துளிகள்!* அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள, கனா படத்தின் மூலம் முதன்முதலாக தயாரிப்பாளராகி இருக்கிறார் நடிகர், சிவகார்த்திகேயன்.* சகுனி மற்றும் மாஸ் என, பல படங்களில் நடித்த பிரணீதா, சான் கித்தன் என்ற பெயரில் உருவாகும் இந்தி வீடியோ ஆல்பத்தில் நடித்து வருகிறார்.* சூப்பர் டீலக்ஸ் படத்தில், வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமந்தா.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !