அமெரிக்க தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்!
இன்று, 'அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி' என்ற பெயருக்காக ஹிலாரி கிளின்டன் போராடி வந்தாலும், இதற்கெல்லாம் முன்னோடி, விக்டோரியா டவுஸ்ஹல் என்ற, 35 வயது பெண்!பெண்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் ஓட்டு உரிமை மறுக்கப்பட்டிருந்த கால கட்டம் அது!ஆண்களுக்கு, பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதத்தில் முதன் முதலில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, தோல்வி கண்ட இவர், ஷேர் மார்க்கெட் எனப்படும் பங்கு சந்தையில் ஈடுபட்ட பெண் என்ற பெருமைக்கும் உரியவர்.மேலும், 'கம்யுனிஸ்ட் மேனிபெஸ்டோ' என்ற புத்தகத்துக்கு ஆங்கில பதிப்பு உருவாக்கியதும் விக்டோரியா தான். அந்தக் காலத்திலேயே, பெண்களால், ஆண்களை போலவே செயல் பட முடியும் என்று நிரூபித்த இவர், இளமையில் வறுமையுடன் போராடியவர்.— ஜோல்னாபையன்.