உள்ளூர் செய்திகள்

கவிச்சோலை

தன்வினை...* எந்த ஆட்சியிலும்தடுக்க முடியவில்லைநிறுத்த முடியவில்லைபோலிகளை...* மேலும், மேலும்வளர்கின்றன போலிகள்எல்லா இடங்களிலும்எல்லாத் துறைகளிலும்...* போலி மது வகைகள்போலி மருந்து வகைகள்போலி மதிப்பெண்கள்போலி பட்டாக்கள்போலி பட்டங்கள்...* போலி ரேஷன் கார்டுகள்பாஸ்போர்ட்டுகள்பத்திரங்கள்கள்ள நோட்டுக்கள்கள்ள ஓட்டுக்கள்...* போலி குடிநீர்போலி என்கவுன்ட்டர்போலி லாட்டரி டிக்கட்போலி பஸ் டிக்கட்...* இன்னும் எத்தனைஎத்தனையோ போலிகள்இந்த நாட்டில்!* இதெல்லாம் மாற்ற முடியாதுமுன்வினை என்பர்பாமர மக்கள்...* யாருக்குத் தெரிகிறது?போலித் தலைவர்களை வளர்க்கும்தன் வினை என்று!— சொல்கேளான் ஏ.வி.கிரி,சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !