உள்ளூர் செய்திகள்

கவிச்சோலை

அமைதி நிலை!* அலைந்து கொண்டிருக்கும்மனதிற்குள்மரத்திற்கு மரம் தாவும்குரங்காக...தாவிப் பாயும் எண்ணங்கள்நிலை கொள்ளாமல்...* ஒன்றிலிருந்து இன்னொன்றிற்குமாறும் - கணப் பொழுதுகாட்சிகள்...ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள்ஓடி வந்துகரையேற முடியாமல்சுருண்டோடும் தோல்வி நிலை போல!* நிமிடத்திற்கொரு முறைமாறிப் போகும்அலை பாயும் எண்ணங்கள்!* வித்தியாசமாக —பணம் தேடிமனம் தேடிமார்க்கம் தேடிபுகழ் தேடிபதவி தேடி...* அமைதியாய்,ஆவேசமாய்,எரிமலையாய்எப்படியெல்லாமோஏறிச் சாடிதொட்டு விடத் துடிக்கும்தூரங்கள்வித விதமாய்!* தூங்கும் போதும்இமைப் பறவைகளுக்குள்இன்னும் கனவுத் திரைகளில்காட்சித் தீவனங்கள்...அமைதியில்லாமல்மனச் சஞ்சலங்களுக்குள்...* எத்தனை ஓடியும்,எவ்வளவு தேடியும்கிடைக்காமல் போகும்அமைதியின் மோன நிலை!* என்றேனும் உள்ளுக்குள்ளேதேடிப் பார்த்து புரிந்துகொண்டோமா... நிம்மதி வேறு எங்குமில்லையடாநமக்குள்ளேயே உள்ளது என்று!— ரஜகை நிலவன், துபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !