கவிச்சோலை!
முத்திரை* நீ வாழ்ந்து மறைந்து விட்டாய்...அதற்கான அடையாளமெங்கே?நீரோடு ஓடுகிற கசடுகள்...அதுவும், நீயும் ஒன்றா?* பிறந்தோம் உழைத்தோம்,உண்டோம் பிழைத்தோம்,வாழவில்லை மறைந்தோம்...உந்தன் முத்திரை எங்கே?* ஊருக்குள்ளாவது உன்னைப் பற்றிதெரியுமா? யாராவது உன்னைப் பற்றிநினைத்துப் பார்ப்பரா?நீ வைத்து விட்டு போனதென்ன?* ஆடினாய், ஓடினாய், மார்தட்டினாய்...மீசைக்கு நெய் போட்டாயே...இப்போது உன் தடயமெங்கே?* உன்னால் யாருக்கும் லாபமில்லை...நீ போனதால் யாருக்கும் இழப்புமில்லை...மண்மேடுகள் மழையில் கரைந்து விடும்...மலைகள் என்றுமே மறைவதில்லை...நீ மண் மேடுதானா?* இருப்பதை மறைக்காமல்,இல்லையென்று சொல்லாமல்,வாய்மையோடு வாழ்ந்திட்டால்கல்லில் செதுக்கப்படும் உன் முத்திரை!— ந.பொன்னுசேகரன், சிவகாசி.