உள்ளூர் செய்திகள்

நட்பு, காதல் மற்றும் உறவு...!

நட்பு'வெரிகுட் மார்னிங்; ஹேவ் ய நைஸ் டே...'கைபேசியில் மிளிர்ந்த குறுஞ்செய்தியை, வியப்புடன் பார்த்தாள் அனு.பாபுவிடமிருந்து வந்திருந்தது அது.அவளுடைய, அலுவலகத்தில்தான், அவனும் பணிபுரிகிறான். இரண்டு அறைகள் தாண்டி, அவன் இருக்கை. இவளும், அவனும் வெவ்வேறு பிரிவு என்றாலும், அலுவல் காரணமாக அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.அவன் யாரோடும், அதிகம் பேச மாட்டான் என்றாலும், பேசுகிற ஓரிரு வார்த்தைகளில், ரசிக்க வைக்கும், குறும்பு ஒளிந்திருக்கும்.அவளோடும், அவன் அதிகம் பேசியதில்லை என்பதால்தான், அவன் அனுப்பியிருந்த குறுஞ்செய்தி, அவளுக்கு வியப்பூட்டியது.அதுவும் இரண்டு அறைகள் தாண்டி இருந்து கொண்டு... இத்தனை நாள் இல்லாமல், இன்று திடீர் என, குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான் என்றால், காரணம் என்னவாக இருக்கும்?யோசித்தாள்... வாசித்தாள்... ரசித்தாள். மீண்டும் வாசித்தாள். 'வெரிகுட் மார்னிங். ஹேவ் ய நைஸ் டே...'மனசுக்குள் மத்தாப்பும், பொறிபோல ஒரு மகிழ்ச்சியும் எட்டிப்பார்த்ததை, அவளால் உணர முடிந்தது.பதில் அனுப்பலாமா என, யோசித்தவளுக்கு, சிறிது தயக்கம் வந்தது. 'இங்கே தானே இருக்கிறான், நேரில் போய் பார்த்துவிட்டால் என்ன...' என்று நினைத்து, கையில் கிடைத்த கோப்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, அவன் அறைக்கு புறப்பட்டாள்.பாபுவின் அறைக்குள், அவள் நுழையும் போது, கணினியில் அவன் எதையோ டைப் செய்து கொண்டிருந்தான். அரவம் கேட்டு நிமிர்ந்தான்.அவளை எதிர்பார்க்காததால், ஒரு நொடி திடுக்கிட்டு தடுமாறியவனைப் பார்த்து, ''குட்மார்னிங்... ஹேவ் ய நைஸ் டே,'' என்று சிரித்தாள் அனு.''ஓ சாரி... அந்த மெசேஜ், ஒரு பிரண்டுக்கு அனுப்ப வேண்டியது. தவறுதலா, உங்க நம்பருக்கு வந்திடுச்சு.''''அப்படியா... நான் கூட எனக்கு நீங்க அனுப்பின மெசேஜ்ன்னு நினைச்சு, கொஞ்ச நேரம் சந்தோஷப்பட்டுட்டேன்.''''அன்புன்னு, எனக்கு ஒரு பிரண்டு; ரெவினியூல ஒர்க் செய்றார். மொபைல்ல அவர் பேருக்கு கீழே உங்க பேர் இருக்குதா, அதனால, தவறுதலா உங்களுக்கு பார்வர்ட் ஆயிடுச்சு,'' என்று, தயக்கமாகச் சொன்னான் பாபு.அவன் பொய் சொல்கிறான் என்பது புரிந்தது. கிண்டலாகச் சிரித்தபடி கேட்டாள், ''அப்போ எனக்கு வாழ்த்து இல்லையா?''''ஏன் இல்லை... நீங்களும் என்னோட பிரண்ட் தானே?''''நான் உங்களுக்கு பதில் மெசேஜ் அனுப்பலாம்ன்னு நினைச்சேன்.''''அனுப்பியிருக்கலாமே?''''உங்க பிரண்ட் அன்புவுக்கு, நீங்க அனுப்பின மெசேஜுக்கு, நான் எப்படி பதில் அனுப்புறதாம்?''''எப்படியானாலும், உங்களுக்கு கிடைச்ச மெசேஜ்தானே? பதிலுக்கு, ஒரு குட்மார்னிங் அனுப்புறதுல என்ன தப்பு?''''நாளைக்கு எனக்கே எனக்குன்னு, ஒரு மேசேஜ் அனுப்புங்க. அப்ப பதில் அனுப்பறேன்,'' என்று கூறி, சிரித்துவிட்டு நகர்ந்தாள்.பாபுவின் முகத்தில், முதலில் தெரிந்த தடுமாற்றம், பின், பூத்த புன்னகை, பேசப்பேச அவன் முகமெங்கும் பரவிய பூரிப்பு எல்லாம் சேர்ந்து, அவள் மனசுக்குள், 'கிச்சுக்கிச்சு' மூட்டியது.'மனோவும் இருந்தானே, ரசனை இல்லாத ஜென்மம்...' என்ற வெறுப்பு, மனத்திற்குள் தோன்றியது. 'ச்சே... இப்போ எதற்காக அவன் நினைப்பு...' என்று, அந்த நினைப்பை உதறித் தள்ளியவள், பாபு பற்றிய சந்தோஷ உணர்வுகளோடு, வேலையில் மூழ்கினாள்.மதியம், 12:00 மணி. பாபுவிடமிருந்து அடுத்த குறுஞ்செய்தி வந்தது.'குட் ஆப்டர் நூன்...'அதைப்படித்ததும், அவள் மனசுக்குள், கலர்கலராய் மத்தாப்பு. அவளும் பதில் அனுப்பினாள்.'சேம் டூ யூ...'இப்படித்தான் ஆரம்பித்தது, அவர்களது நட்பு.காதல்அந்த உணவகத்தில், காத்திருந்தான் பாபு. குழந்தை சுஜாவையும் அழைத்து வந்திருந்தாள் அனு.''ஹலோ...'' குரலில் ஆனந்தம் கொப்பளிக்க அழைத்தாள். பாபுவும் மலர்ச்சியாய் திரும்பினான்.''இது சுஜா... எங்க வீட்டு இளவரசி,'' என்று, குழந்தையை அறிமுகப்படுத்தினாள்.''ஹாய்...'' என்று, சுஜாவின் கன்னத்தைத் தட்டிய பாபு, தயாராய் கொண்டு வந்திருந்த சாக்லெட் பார்சலை, அவளிடம் கொடுத்தான்.''என்ன படிக்கிற?''''தேர்ட் ஸ்டேண்டர்ட்.''''சோ ஸ்வீட்,'' கன்னம் கிள்ளி, முத்தமிட்டவன், ''மகாராணி வாங்க,'' என்று கூறி அபினயத்து, அனுவை அழைத்தான்.''என்ன, என்னை புனைபெயர் வச்சு கூப்பிடுறீங்க?''''இது புனைபெயர் இல்லை; நீங்களே அறிவிச்சுக்கிட்டது தான். சுஜா இளவரசின்னா, அவங்க அம்மா, மகாராணி தானே?''''அட...'' அவன் குறும்பை ரசித்துச் சிரித்தாள். அவள் சிரிப்பை, அவனும் ரசித்தான்.உள்ளே வந்து அமர்ந்தனர்; உணவுப் பட்டியலைப் புரட்டி, அவனே ஆர்டர் செய்தான்.இப்படி உணவகத்தில் தொடர்ந்த நட்பு, அலுவலகம் முடிந்ததும், இருவரும் பூங்காவுக்கு செல்லும் அளவுக்கு நெருங்கியது.மாலையும், இரவும் சந்திக்கும் வேளையில், அவர்கள் ஒரு பூங்காவின், நடைப்பாதை ஓரம், சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தனர்.''உங்க நட்பு, என் வாழ்க்கையில், ஒரு புதிய அத்தியாயம் பாபு.''''சந்தோஷம் அனு.''''மனோகருடனான என் வாழ்க்கை, நாலு வருட நரகம்; மிக மோசமான சேடிஸ்ட் அவன். உடம்பு முழுக்க தாழ்வு மனப்பான்மை. அவனை விட, நான் அதிகம் படிச்சிருக்கேன், அரசாங்க வேலையில இருக்கேன், நிறைய சம்பாதிக்கிறேங்கிற காரணத்துக்காக, சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட, குத்திக் காட்டுவான்,''என்றவள், சிறிது நேரம் பேசுவதை நிறுத்தி, தலையைக் குனிந்தபடி தொடர்ந்தாள்...''குழந்தைக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்தாக் கூட, 'உன் சம்பளக்காசுங்றதால உன் இஷ்டத்துக்கு செலவு செய்ற, நான் என்ன ஏதுன்னு கேட்கவா முடியும்'ன்னு சொல்வான். ஒரு கட்டத்துல இதெல்லாம் அளவுக்கு அதிகமாய் போச்சு. தாழ்வு மனப்பான்மையில தவிச்ச மனோ, அவனாவே, எங்களை விட்டுப்போயிட்டான். அப்போ சுஜாவுக்கு இரண்டு வயசு. ஆச்சு... அப்படி இப்படின்னு ஆறு வருஷம் ஓடியாச்சு.''தன் கண் கலங்குவது வெளித்தெரியாமல் இருக்க, நிமிர்ந்து அவனைப் பார்த்து சிரித்தாள்.''ம்ச்... பாவம்தான் நீங்க.''''எனக்கு பரிதாபம் தேவையில்லை; நான் வாழ்க்கையை சவாலா எடுத்துக்கிட்டேன். இதோ, சுஜா மூன்றாம் வகுப்பு வந்திட்டா, என்ன குறை எங்களுக்கு?''''அப்புறம், அவரோட சேர்ந்து வாழ முயற்சிக்கலையா?''''அவனாத்தானே விலகிப் போனான்... போடான்னு விட்டுட்டேன்.''''குழந்தைக்காகவாவது...''''அப்பா பற்றி, அவளுக்கும் ஓரளவு தெரியும். வளர வளர புரிஞ்சுக்குவா. அப்பாவை இழந்த குழந்தைகளே இல்லையா?''''அப்பா இறந்திட்டார்ங்கிறது வேற; இருந்தும் இல்லைங்கிறது வேற அனு. அவ பெரியவளாகி, கல்யாணம் ஆகும்போது...''அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டாள்.''பெரியவங்க பேசி நடத்தி வச்ச கல்யாணம்தான் என்னோடது; ஊத்திக்கிச்சே... என்ன இப்படி பேசறேன்னு பாக்கறீங்களா... ஜாதி, மதம் எல்லாம் முக்கியத்துவம் இழந்து போச்சு. நகர்புறத்துல ஜாதி, மதம் எங்கே இருக்கு? சுயலாபத்துக்காக, ஒரு சிலர்தான் ஜாதி, மதம்ன்னு கிராம மக்களை உசுப்பேத்திகிட்டிருக்காங்க. மேட்ரிமோனியல்ல ஜாதி, மதம் தடையில்லைன்னு வர்ற விளம்பரங்கள் அதிகமாயிட்டுத்தான் இருக்கு,''என்றவள், நிறுத்தி, அவன் முகம் பார்த்தாள். மையமாய் தலையசைத்தான் பாபு.''சுஜா படிச்சு முடிச்சு வேலைக்கு வந்து, கல்யாணத்துக்கு தயாராகக் கூடிய பதினைஞ்சு இருபது வருஷத்துல, உலகம் இன்னும் மாறிப் போயிருக்கும். பொண்ணு நமக்கு ஏத்தவளா இருக்காளா, ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்க்கைய வசதியா வாழ முடியுமான்னு பாப்பாங்களே தவிர, பொண்ணுக்கு அப்பன் இருக்கானா, இல்லையான்னு யாரும் ஆராய்ச்சி செய்யப் போறதில்லை,'' என்றாள்.''உங்களோட இந்த முற்போக்கு சிந்தனை எனக்குப் பிடிச்சிருக்கு அனு.''''திமிர் பிடிச்சவளா தெரியலையா?''''ம்ஹூம்... தன்னம்பிக்கை மிக்கவங்களா தெரியறீங்க.''''தேங்க்ஸ்.''''ஐ லைக் யூ.''''எனக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு.''''நாம ஏன் சேர்ந்து இருக்கக் கூடாது அனு?''''சேர்ந்துதானே இருக்கறோம்.''''நான் சொல்றது, உங்க வாழ்க்கைப் பயணத்துல, நானும் ஒரு அங்கமா சேர்ந்து வரணும்ன்னு,'' சொன்ன பாபுவின் கண்களை, ஆழமாய் பார்த்தாள் அனு.நட்பு, ஆர்வம், ஏக்கம் எல்லாம் கலந்து அதில் தெரிந்தது. அவளது உதட்டோரம், ஒரு சினேகப் புன்னகை.''என்னோட நீ வான்னு கூப்பிடாம, உன்னோட நான் வர்றேன்னு சொல்றீங்களே... கிரேட்!''அவன் கையைப் பற்றினாள். மெல்ல அவன் மீது சரிந்தாள். சரியோ, தவறோ ஒரு காதல் அங்கே முளைவிட்டது.உறவுஅலுவலகம் முடியும் நேரம்; அனுவை தன் அறைக்கு அழைத்தான் பாபு.''அனு.''''ம்...''''நான், உன் கூட, ஒரு நாள் தங்க விரும்பறேன்.''''எ... என்ன சொல்றீங்க?''''ஒரு நாள், ஒரே ஒரு நாள். நீ விரும்புற ஒரு நாள்,'' என்று கூறிய அவன் கண்களில் தெரிந்த தாபம், அவனது எண்ணத்தை, அவளுக்கு உணர்த்தியது. அவளுக்குள்ளும் ஒரு சிலிர்ப்பு. மவுனமாய் அவனைப் பார்த்தாள்.''ஒரே ஒரு தடவை அனு.''''அ... அதெல்லாம் வேணுமா?''''உனக்கும் வேணும்தான்; நீயும் மனுஷிதானே, மரக்கட்டை இல்லையே... உயிரும், உடலும் மட்டும் பெண் இல்லை, உணர்வும் சேர்ந்ததுதான்னு தெரியாதவனா நான்... உன் அவஸ்தை எனக்கும் புரியும் அனு.''மறுத்துப் பேச முற்பட்டவளுக்கு, வார்த்தை வரவில்லை. மனதில் மெல்லிய உணர்வுகள் உயிர்த்தெழுவதை உணர்ந்தாள்.''நம் மனசுக்கு இடைவெளி இருக்கா அனு?''''இல்லை.''''உடம்புக்கு மட்டும், அது எதுக்கு?''அவள் இளகினாள்; ஒரு சில நொடிகள் தான். சட்டென, ஒரு எச்சரிக்கை மணி அவளுக்குள்.''நோ வேண்டாம்... வேண்டாம்ங்க. நாம இப்படியே இருக்கலாம்.''''துணை இல்லாத உனக்கு, என்னால் கிடைக்கும் சுகம் தவறில்லையே அனு.''''வேண்டாம்.''''உன் மனசுக்குன்னு, ஒரு தேவை இருப்பது போல, உடலுக்கும் ஒரு தேவை இருக்குதானே அனு?''''அதை நான் மறுக்கலை; அது தேவையாவே இருந்திட்டுப் போகட்டும் விடுங்க.''''ஏன் குற்ற உணர்வா?''''நம் இருவரின் சொந்த விருப்பம் சம்பந்தப்பட்ட விஷயம் இது. இதில் எங்கிருந்து வந்தது குற்ற உணர்வு.''''அப்போ மத்தவங்க என்ன பேசுவாங்களோன்னு...''''மத்தவங்க பேசுறதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. இது நம்மோட அந்தரங்கம். இப்ப மட்டும், இந்த ஆபீசில் நம்மைப்பற்றிய, 'கிசு கிசு' இல்லைன்னு நினைக்கிறீங்களா? அதை எல்லாம், நான் பெருசா எடுத்துக்கலை; எடுத்துக்கவும் மாட்டேன்.''''வேற என்னதான் பிரச்னை?''''நானேதான் பாபு.''''என்ன சொல்ற நீ?''''ஆறு வருஷமா தனிமையில் வாழ்ந்த உடம்பு இது. இப்போ, உங்க கூட ஒரு சந்தர்ப்பம் அமையுது. இப்ப சுகம் கண்ட உடம்பு, திரும்பவும் அதுக்கு ஆசைப்படும்தானே? நான் ஆசைப்படும் ஒவ்வொரு முறையும் நீங்க கிடைப்பீங்களா பாபு?''''நான்...'' என்று, ஏதோ சொல்ல வந்த அவனை, தடுத்துப் பேசினாள்...''கிடைப்பேன்னு மட்டும் பொய் சொல்லாதீங்க; அது சாத்தியம் இல்லை. உங்களுக்கு, மனைவி, குழந்தைகன்னு குடும்பம் இருக்கு. நான் கூப்பிடும் போதெல்லாம், அதை உதறிட்டு உங்களால வந்திட முடியுமா?''அவன் மவுனமானான்.''அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள்ல, என் மனசும், உடம்பும் படுகிற அவஸ்தை கொடுமையா இருக்கும் பாபு. வேண்டாம்; நாம இப்படியே இருந்துட்டுப் போகலாம். அதுதான் நல்லது; புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்.''அவன் தலையசைத்தான்.''ஆறுதலாய் பேச, அடைக்கலம் தேட, அன்பை பகிர்ந்துக்க, தோள் சாயன்னு நமக்கு ஒரு உறவு வேணும். எப்போதும், உங்களுக்கு நானும், எனக்கு நீங்களுமாய் இருப்போம்; அது போதும்.''ஆதரவாய் அவனது கரம் பற்றினாள் அனு. அதில், ஒரு அழுத்தம் இருந்தது.ஜே.டி.ஆர்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !