உள்ளூர் செய்திகள்

கண்ணாடி பாலம்!

சமீபத்தில், கேரள மாநிலம், இடுக்கி, வாகமண் சுற்றுலா தலத்தில், கண்ணாடியால் ஆன பாலம் திறக்கப்பட்டது. இதில் நின்று, அக்கம்பக்கத்து மலைகள் மற்றும் ஊர்களை காணலாம்.பாலத்தில், ஒரு நேரத்தில், 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 10 நிமிடம் அழகை ரசிக்கலாம். இதற்காக, ஒருவருக்கு, 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு கண்ணாடிகள் மற்றும் உருக்கு கம்பிகளால் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவு, நான்கு கோடி ரூபாய். கண்ணாடி பாலத்தில் ஏறி, அழகிய இயற்கை காட்சிகளை காண, ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !