உள்ளூர் செய்திகள்

வேட்டையாடும் ஆடு!

படத்தைப் பாருங்கள்... ஒரு ஆட்டின் இரண்டு பக்கமும் ஆபத்தான துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. ஆட்டின் உடலில் கட்டப்பட்டுள்ள துப்பாக்கியை வைத்து என்ன செய்ய முடியும் என குழம்புகிறீர்களா? அந்த ஆட்டை வைத்து ஆப்ரிக்காவில், நைஜீரியா நாட்டில் வேட்டையாடு கின்றனர். கொடிய மிருகங்களை வேட்டையாட செல்லும் போது, ஆட்டின் உடலில் இது போல் துப்பாக்கியை கட்டி கூட்டிச் செல்வர். ஆட்டை நோக்கி மிருகங்கள் வரும் போது, இந்த துப்பாக்கியை எப்படியோ மறைந்திருந்து இயக்கி, எதிரியை வீழ்த்தி விடுவர். கிடைத்தால் வேட்டை, போனால் ஆடு என்ற ரீதியில் நடக்கும் இந்த அபூர்வ வேட்டையை நினைத்தாலே குலை நடுங்குகிறது.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !