உள்ளூர் செய்திகள்

கின்னஸ் சாதனை படைத்த கார் உரிமையாளர் இவர்!

இப்போதெல்லாம், கார் உரிமையாளர்கள் ஒரு காரை, ஐந்து ஆண்டுகள் வைத்திருந்தாலே ஆச்சர்யம். புதிய மாடல் கார்கள் வந்ததும், பழைய கார்களை விற்று, புதிய கார் வாங்கி விடுவர். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ், 61 ஆண்டுகளாக, தொடர்ந்து ஒரு காரையே பயன்படுத்தி வருகிறார். 1951ல், 'செவர்லே கூபே' என்ற வெள்ளை நிற காரை வாங்கினார். அன்றிலிருந்து, இந்த ஒரு காரைத் தான், அவர் பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம், ஒரு காரை அதிக ஆண்டுகள் பயன்படுத்திய உரிமையாளர் என்ற பெருமையுடன், கின்னஸ் சாதனை புத்தகத்தில், இவர் பெயர் இடம் பிடித்துள்ளது.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !