அழகு தேவதையின் தந்தையா இவர்!
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல, 'டிவி' நடிகையும், மாடல் அழகியுமான கிம் கர்தாஷியன்; இவர் அம்மாவின் இரண்டாவது கணவர், ப்ரூஸ் ஜென்னர், வயது, 65. சமீபத்தில் இவர், அறுவை சிகிச்சையின் மூலம் பெண்ணாக மாறி, தன் பெயரை, காத்லின் ஜென்னர் என மாற்றிக் கொண்டதாக, செய்திகள் வெளியானது. ஆனால், அவரின் புகைப்படங்கள் வெளியாகவில்லை.இந்நிலையில், சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகையின் அட்டையில், ப்ரூஸ் ஜென்னர் என்ற காத்லின் ஜென்னரின் படு கவர்ச்சியான புகைப்படம் வெளியாகி, அமெரிக்கா முழுவதும் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இவர், முன்னாள் தடகள வீரர். சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை குவித்துள்ளார்.— ஜோல்னாபையன்.