ஆணி மீது தலையை வைத்து தலைகீழாக ஒரு சாதனை!
புதிய சாதனைகள் நிகழ்த்துவது என்றால், சீனர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. மிக கடினமான செயல்களைக் கூட, சர்வ சாதாரணமாக செய்து விடுவர். சீனாவைச் சேர்ந்த, லீ ஜின் என்பவரும், இந்த ரகம் தான்.இவர், கூர்மையான, நீண்ட ஆணி மீது, தன் மொட்டைத் தலையை வைத்து, 10 விநாடிகள் தலைகீழாக நின்று, சாதனை புரிந்துள்ளார். சீனாவின் பாரம்பரிய சண்டை கலை நிபுணரான இவர், இதற்காக, பல மாதங்கள், பயிற்சி எடுத்துள்ளார்.சாதனை நிகழ்த்திய அன்று, இரண்டு பேர் சேர்ந்து, லீயை, தலைகீழாக தூக்கி, ஆணி மீது நிறுத்தினர். கடுமையான வலி ஏற்பட்டாலும், அதை வெளியில் காட்டாமல், இச்சாதனையை நிகழ்த்தி உள்ளார் லீ ஜின்.சாதனையை முடித்தபின், அவரது மொட்டை தலையில், ஆணி குத்திய, கடுமையான பள்ளம் இருந்தது. மற்றபடி, அதிலிருந்து, ரத்தம் எதுவும் வராதது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.— ஜோல்னா பையன்.