மலை உச்சி கோவில்!
பர்மா நாட்டின் தலைநகரான மியான்மரின் மலை உச்சியில், தங்க நிற கோவில் இருக்கிறது. எரிமலை இருந்த இடத்தின் மீது, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. அழகாக இருக்கும் இந்த கோவிலுக்கு, 777 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டும்.இக்கோவிலில் குரங்குகள் தொல்லை அதிகம். பக்தர்களின் உடைமைகளை பிடுங்கி செல்வது குரங்குகளின் அன்றாட செயலாகும். செருப்பு அணிந்து செல்ல அனுமதி இல்லை என்பதால், படிக்கட்டுகளில் ஏறி செல்ல சிரமமாக இருக்கும். எனினும், இத்தனை இடர்களை தாண்டி, உள்ளூர் மக்களுடன் சில சுற்றுலா பயணிகளும், கோவிலுக்கு சென்று வருகின்றனர். —ஜோல்னாபையன்