உள்ளூர் செய்திகள்

ஹிட்லரின் முதலை!

ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லரை பற்றி, யாரும் தெரியாமல் இருக்க முடியாது. இவர் உயிருடன் இருந்தபோது, பெர்லின் நகரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு அடிக்கடி சென்று, அங்குள்ள விலங்குகளுடன் நேரத்தை செலவிடுவது வழக்கம். அங்கிருந்த ஒரு முதலை, அவரது கவனத்தை ஈர்த்தது. அந்த முதலைக்கு, 'சடோன்' என, பெயர் வைத்து, செல்லமாக வளர்த்து வந்தார். பூங்காவுக்கு செல்லும்போதெல்லாம், அந்த முதலையிடம், தனி கவனம் செலுத்தி வந்தார், ஹிட்லர். அவர், இறந்த பின், அந்த பூங்காவில் இருந்த பெரும்பாலான உயிரினங்களை, ரஷ்ய ஆட்சியாளர்கள் எடுத்துச் சென்று விட்டனர். ஹிட்லரின் செல்லப் பிராணியான, சடோன் முதலையும், மாஸ்கோவில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. ஹிட்லர் வளர்த்த முதலை என்பதால், அதை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் ஆர்வம் காட்டினர். இந்நிலையில், நோய்வாய்ப்பட்ட அந்த முதலை, சமீபத்தில், தன், 84வது வயதில் உயிரிழந்தது. மாஸ்கோ உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், 'இந்த முதலையை, ஹிட்லர் வளர்த்து வந்தார் என்பதற்காக, எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. ஆனால், துவக்கத்திலிருந்து, இது ஹிட்லரின் முதலை என, பலராலும் பேசப்பட்டு வந்ததை மறுக்க முடியாது...' என்கின்றனர். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !