குழந்தைக்காக ஏங்கும் ஹாலிவுட் நடிகை!
'தி பிரேக் அப், வேர் இஸ் தி மில்லர்' உள்ளிட்ட, பல படங் களில் நடித்தவர், பிரபல ஹாலிவுட் நடிகை, ஜெனிபர் அனிஸ்டன். இவருக்கு, தற்போது, 44 வயதாகிறது. பிரபல நடிகர், பிராட் பிட்டும், இவரும், உயிருக்கு உயிராக காதலித்தனர். திருமணம் முடியப் போகும் சமயத்தில், இவர்களின் காதலுக்கு வில்லியாக வந்த, ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட்டை, ஜெனிபரிடமிருந்து, கொத்திக் கொண்டு போய் விட்டார். இதனால், சில காலம், காதல் தோல்வியால் புலம்பிக் கொண்டிருந்த ஜெனிபர், ஜஸ்டின் தெரோக்ஸ் என்ற நடிகரை, தற்போது காதலித்து வருகிறார். நிச்சயதார்த்தம் கூட, முடிந்து விட்டது. ஆனால், திருமண தேதி தான், இன்னும் முடிவாகாமல், இழுத்துக் கொண்டே போகிறது. இதனால், பயங்கர டென்ஷனில் இருக்கிறார், ஜெனிபர். 'எனக்கு, இப்போதே, 44 வயதாகி விட்டது. மற்ற பெண்களை போல், எனக்கும், தாய்மை அடைய வேண்டும் என்ற, ஏக்கம் வந்து விட்டது. இதற்கு மேலும், தாமதமானால், எப்படி தாய்மை அடைவது... எனவே, முதலில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு பின், திருமண தேதியை முடிவு செய்யலாம்...' என, ஜஸ்டின் தெரோக்சிடம், கட்அன்ட்ரைட்டாக கூறி உள்ளார்.— ஜோல்னா பையன்.