வீட்டுக்குறிப்பு!
* துணிகளில், 'ஹேர் - டை' கறை படிந்த பகுதியை, நெயில் பாலிஷ் ரிமூவரால் துடைத்தால், போய் விடும்* ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய் விட்டால், சில சொட்டுகள் நீலம் விட்டால், அழகாக பதிய வரும்.* மின் விசிறியில் துாசி படிந்து, கறை படிந்திருந்தால், துணியை மண்ணெண்ணெயில் நனைத்து அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பின், நல்ல துணியால் துடைத்தால் பளிச்சென்றாகி விடும்* அரை வாளி தண்ணீரில், நான்கு தேக்கரண்டி வினிகரை கலந்து, ஜீன்ஸ் துணிகளை அலசினால், சாயம் போவதை தடுக்கலாம்* புது வீட்டில், பெயின்ட் வாடை அடித்தால், ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி, அறைகளில் வைத்தால் நீங்கிவிடும் * ஆணி அடிக்கும் போது, அதன் நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால், சுவரில் சுலபமாக இறங்கும்.