எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களின் கண்ணாடியை உடைத்து, அவற்றில் உள்ள பொருட்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. காருக்குள் பொருட்கள் ஏதும் இல்லாவிட்டாலும், கண்ணாடிகளை உடைத்து விடுகின்றனர், திருடர்கள். இதை தடுக்க புது யுக்தியை கண்டுபிடித்துள்ளனர், கார் உரிமையாளர்கள்.'ஷாப்பிங்' செய்வதற்கு காரை நிறுத்தி விட்டுச் செல்லும்போது, காரின் பின்பக்க கதவை திறந்து வைத்துவிட்டே செல்கின்றனர். காருக்குள் எந்த பொருளையும் வைப்பதும் இல்லை.'காருக்குள் பொருட்களை தேடி திருடர்கள் ஏமாந்தாலும் பரவாயில்லை; காரின் கண்ணாடி உடையாமல் இருந்தால் சரி...' என்கின்றனர், கார் உரிமையாளர்கள்.எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!ஜோல்னாபையன்