உள்ளூர் செய்திகள்

கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் பழக்கம் எப்படி வந்தது!

கடந்த, 1500ல், பனி சுமந்து நின்ற , ' பிர் ' மரங்களின் அழகில் மயங்கி ய , ஜெர்மன் நாட்டின் அரசர், மார்ட்டின் லுாதர் கிங், கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக மெழுகுவ ர் த்தியால் அலங்கரித்து, அரண்மனையின் முன் மரத்தை வைத்தார். அதன்பின், கடந்த, 1521ல், பிரான்ஸ் நாட்டு இளவரசி, ஹெலினா, அரண்மனையில், 'பிர்' மரம் ஒன்றை வைக்க, பிரான்ஸ் நாட்டு மக்கள் அது முதல், அவர்களும் கிறிஸ்துமஸ் மரத்தை வீட்டில் வைக்க ஆரம்பித்தனர். இங்கிலாந்து நாட்டு ராணி, விக்டோரியாவின் காதலர் ஆல்பர்ட், காதல் பரிசாக, 'பிர்' மரத்தை தர, அது முதல், 'வின்ட்சர்' மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் இந்த மரமும் இணைந்து விட்டது. கிறிஸ்துமஸ் விழா அன்று கிறிஸ்துவர்கள், 'பிர், பைன்' மற்றும் சவுக்கு மரங்களை பயன்படுத்தி அதில் மலர்கள் மற்றும் அலங்கார பொருட்களை கொண்டு அலங்கரித்து, மரத்தின் உச்சியில், நட்சத்திர வடிவம் ஒன்றை வைத்து, மின் விளக்குகளால் அலங்காரத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அழகு சேர்க்கும் வகையில் வீடுகளின் முன் மரத்தை வைப்பர். நவீன காலத்தில், செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !