உள்ளூர் செய்திகள்

ஐ.ஏ.எஸ்., தெரு!

டில்லியில் உள்ள, டாக்டர் முகர்ஜி நகரை, 'ஐ.ஏ.எஸ்., தெரு' என்று தான் அழைக்கின்றனர். ஐ.ஏ.எஸ்., தேர்வில், வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் வரும் மாணவர்கள், இந்த தெருவில் தங்கியிருந்து தான், பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு, பயிற்சி அளிப்பதற்காக இருநூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு, இருக்கின்றன. இந்த தெருவில் எங்கு பார்த்தாலும் புத்தகக் கடைகளை காணலாம். இந்தியாவில் உள்ள ஏராளமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இந்த ஐ.ஏ.எஸ்., தெருவில் சுற்றி திரிந்தவர்கள் தான்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !