உள்ளூர் செய்திகள்

நடிப்பு இல்லாவிட்டால் என்ன; பாட்டு இருக்கிறதே!

தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்தவர், நடிகை வசுந்தரா தாஸ். இசையில் ஆர்வமுள்ள இவர், சொந்த ஊரான பெங்களூருவில், கணவர் ராபர்ட் டோவுடன் இணைந்து, 'டிரம் ஜாம் கம்யூனிட்டி' என்ற பெயரில், இசைக்குழு அமைத்து, கடந்த ஒன்பது ஆண்டுகளாக, கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக, கச்சேரிகள் நடத்தி வருகிறார்.இதுவரை, கார்ப்பரேட்களுக்காக செயல்பட்டு வந்த இந்தக் குழு, தற்போது, மாதம் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையன்றும் பெங்களூரு எம்.ஜி., சாலையில், பொதுமக்களுக்காக நிகழ்ச்சிகள் நடத்துகிறது. அப்போது, யாராவது பாட விரும்பம் தெரிவித்தால், தனிப்பட முறையில் வசுந்தரா தாசும், அவரது கணவரும், சிறப்பு பயிற்சி அளித்து, அவர்களை பாட வைக்கின்றனர்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !