அளவுக்கு மிஞ்சினால்...
தற்போது, இளைஞர்கள், இளம் பெண்கள் மட்டுமல்லாது, குழந்தைகள் கூட, மொபைல் போனில், மணிக்கணக்கில், 'வீடியோ கேம்' விளையாடும் ஆபத்தான சூழல் அதிகரித்துள்ளது.அண்டை நாடான, சீனாவின், ஹுனான் மாகாணத்தை சேர்ந்த, ஒரு இளம் பெண், அலுவலகத்துக்கு ஒரு வாரம் விடுமுறை போட்டார். துாங்கும் நேரத்தை தவிர, மற்ற நேரம் முழுவதும், தொடர்ச்சியாக, 'வீடியோ கேம்' விளையாடினார்.'மூன்று நாட்களிலேயே, அவரது வலது கையில் இரண்டு விரல்களில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனாலும், தொடர்ந்து விளையாடினார். அடுத்த சில மணி நேரங்களில், அவரது இரண்டு விரல்கள் செயல் இழந்து விட்டன. டாக்டர்களிடம் கேட்டபோது, தொடர்ச்சியாக மொபைல் போனில், 'கேம்' விளையாடியதால், இவ்வாறு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.தற்போது, விரல்கள் பழைய நிலைக்கு திரும்ப, தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார், அப்பெண்.— ஜோல்னாபையன்.