சின்ன வீடு வைத்திருந்தால் பதவி பணால்!
ஒரு காலத்தில், 'லஞ்சம் வாங்கினாலும், ஊழல் செய்தாலும், தண்டனை உறுதி...' என்ற, பயம் சீனர்களுக்கு இருந்தது. ஆனால், இன்று நிலைமை மாறி விட்டது. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், அதிக பணத்தால், திக்குமுக்காடி திரிகின்றனர்.கடந்த, 2012ல் சீனாவின் ஜனாதிபதியாக பதவியேற்றார் சி - ஜின் பிங். இவர் ஊழல் அதிகாரிகளிடம் கருணை காட்டவில்லை அத்துடன், அதிகாரிகள், 'சின்னவீடு' வைத் திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பதவி பறிக்கப்பட்டது. நாட்டு பணத்தை கொள்ளை அடித்து, 'சின்னவீடு'களுக்கு வாரி வழங்கும் உயர் அதிகாரிகளை கண்டுபிடித்து தண்டிக்க, ரகசிய போலீசாரை முடுக்கி விட்டுள்ளார் ஜனாதிபதி. இவருடைய இந்த முயற்சிக்கு, மக்களின் முழு ஆதரவு இருக்கிறது. இங்கேயும், 'சின்னவீடு'கள் ஏராளம்; ஆனால், நடவடிக்கை தான்...— ஜோல்னாபையன்.