அளவுக்கு அதிகமாக சிரித்தால்...
நம் அண்டை நாடான சீனாவில், கோங்ஜோ என்ற நகரிலிருந்து புறப்பட்ட ரயிலில் பயணித்த ஒரு இளம் பெண், சக பயணியருடன் ஜாலியாக பேசிக் கொண்டே வந்தார். பயணி ஒருவர் நகைச்சுவையாக பேசியதால், சிரிப்பை அடக்க முடியாமல், வாயை அகலமாக திறந்து, பலமாக சிரித்தார்.சிறிது நேரத்தில் சிரிப்பை அடக்கிய அவரால், அகலமாக திறந்த வாயை மூட முடியவில்லை. அருகில் உள்ள பயணியர், எவ்வளவோ முயன்றும், அவரது வாயை மூட முடியவில்லை. அடுத்த பெட்டியில் இருந்த, லுயோ வென்ஜெங் என்ற டாக்டரை தேடிப்பிடித்து அழைத்து வந்தனர். அந்த பெண்ணை பரிசோதித்தவர், பக்கவாதம் போன்ற சிறிய பாதிப்பு காரணமாக, அவரது வாயை மூட முடியாததையும், அளவுக்கு அதிகமாக சிரித்ததால், தாடை சற்று இடம் மாறியதையும் கண்டுபிடித்தார். நீண்ட நேரம் கடுமையாக முயற்சி செய்து, அந்த பெண்ணின் தாடையை சரி செய்தார். இயல்பான நிலைக்கு திரும்பிய அந்த பெண்ணும், சக பயணியரும், நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஜோல்னாபையன்