கார் தொழில்நுட்பத்தில், கில்லி இவர்!
உலக புகழ்பெற்ற, 'பெராரி' கார் தயாரிப்பாளர், 'பெராரி டெக்சேலஞ்சு' என்ற பெயரில், கார் தொழில்நுட்பம் சம்பந்தமாக, போட்டிகள் நடத்துவதுண்டு. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான கார் டெக்னீஷியன்கள், இப்போட்டியில் கலந்து கொள்வர்.சமீபத்தில், கேரளாவில் நடந்த இப்போட்டியில், திரிச்சூர் அருகில் உள்ள விய்யூரை சேர்ந்த, ஜஸ்டின் அகஸ்டின் முதலிடத்தை பெற்றார். சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டு டெக்னீஷியன்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.கடந்த, 1995ல் கேரளாவிலுள்ள பட்டாசு கம்பெனி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், இவரது தந்தை இறந்த போது, இன்ஜினியர் படிப்புக்கு முழுக்கு போட்ட ஜஸ்டின், கார் தொழில்நுட்பம் பற்றி அறிவதில் தீவிரமாக இறங்கினார். எப்படிப்பட்ட காராக இருந்தாலும், அதை, எளிதில் பழுது பார்த்து, சரி செய்து விடுவார். 2002ல் சென்னையில் நடந்த, 'மாருதி சவுத் சோன் ஸ்கில்' டெஸ்டில் முதலிடத்தை பெற்றார். உலகில் எங்கு கார்கள் பற்றிய தொழில்நுட்ப போட்டி இருந்தாலும், இவர் அதில் எளிதாக வென்று விடுகிறார்.— ஜோல்னாபையன்.