உள்ளூர் செய்திகள்

புலி ஆராய்ச்சியில், 40 ஆண்டுகள்!

படத்தில் இருப்பவர் பெயர், வால்மீக் தாப்பர். இந்தி நடிகர், சசி கபூரின் மகள் சஞ்சனா கபூரின் கணவர். இவர், கடந்த, 40 ஆண்டுகளாக, பல்வேறு காடுகளில் அலைந்து, புலிகளை பற்றி ஆராய்ந்து, ஏராளமான புத்தகங்களை எழுதி உள்ளார். இதுபற்றி கூறும் போது, 'என் வாழ்நாளில் முக்கால் பகுதி காலத்தை, புலிகள் குறித்த ஆராய்ச்சிக்காக செலவிட்டுள்ளேன். இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்தியாவில், 40,000 புலிகள் இருந்தன; ஆனால், இன்றோ, 2,000 புலிகள் தான் இருக்கின்றன. புலிகளை கொன்று, சீனா மற்றும் திபெத் போன்ற நாடுகளுக்கு கடத்துகின்றனர். இங்கு ஏராளமான புலி பாதுகாப்பு மையங்கள் இருந்தாலும், 48 பாதுகாப்பு மையங்களில், ஒரு புலி கூட இல்லை. இதையெல்லாம் பார்க்கும் போது, என் வாழ்க்கையில், 40 ஆண்டுகள் வீணாகி விட்டதே என்று வருத்தமாக உள்ளது...' என்கிறார் இந்த புலிநேசன்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !