உள்ளூர் செய்திகள்

புதுமைப் பெண்!

பி.எட்., இரண்டாம் ஆண்டு கல்லுாரி மாணவியான மகிமா, தந்தையின் ஆட்டோவை ஓட்டி, குடும்பத்துக்கு உதவியாக இருந்து வந்தார். சமீபத்தில், இவருக்கு திருமணம் நடைபெற்றது. கணவரை, ஆட்டோவில் உட்கார வைத்து, மணமகள் கோலத்தில் தானே ஆட்டோ ஓட்டி, பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இவர், மணக்கோலத்தில் ஆட்டோ ஓட்டுவதை கண்டு, அனைவரும் வியந்தனர். கேரள மாநிலம், கோட்டயம், கறுகச்சாலை சேர்ந்தவர், மகிமா. அடுத்தபடியாக, 400 கி.மீ., தொலைவில் உள்ள, கணவர் வீட்டுக்கு, ஆட்டோவில் செல்ல இருக்கிறார், இந்த துணிச்சல்கார புதுமைப் பெண். — ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !