உள்ளூர் செய்திகள்

இந்தியர்களை தேடும் இன்டர்போல்!

ஜனவரி, 2008 முதல், செப்., 15, 2010 வரை, 338 இந்தியர்களைத் தேடி, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ், சிவப்பு நோட்டீசை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் எல்லா நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசின்படி, அதில்­ இடம் பெற்றவர்கள் யாராவது சிக்கினால், அவர்களை அந்த நாடு கைது செய்து, குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ள நாட்டிற்கு, நாடு கடத்த வேண்டும். இதே கால கட்டத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த, 321 பேர், சீனாவைச் சேர்ந்த, 216 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த, 160 பேர், பிரிட்டனைச் சேர்ந்த, 58 பேர், கனடாவைச் சேர்ந்த, 98 பேரைத் தேடியும், இன்டர்போல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சர்வதேச அளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள இவர்களை, பல நாட்டு போலீசார் தேடி வருகின்றனர். ஐக்கிய அரபு குடியரசு, ஓமன், கத்தார், சவூதி அரேபியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் இந்தியர்கள் அதிக அளவு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !