உள்ளூர் செய்திகள்

நேரு - எட்வினா காதல் உண்மையா?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், கடைசி வைசிராயரான மவுண்ட் பேட்டன் பிரபுவின் மனைவி, எட்வினாவும் காதலர்கள் என்று கூறுவர்.இதை மையமாக வைத்து, பாலிவுட்டில் சிலர், திரைப்படம் தயாரிக்க முயற்சித்த போது, அரசியல் நெருக்கடியால், அது நடக்கவில்லை. ஆனால், ஹாலிவுட்டில், வைசிராய் ஹவுஸ் என்ற பெயரில், இந்தியா - பாக்., பிரிவினை மற்றும் நேரு - எட்வினா விவகாரத்தை மையமாக வைத்து, ஒரு படம் வெளியானது.இப்படத்தை பார்த்த, மவுண்ட் பேட்டனின் இளைய மகள் பமீலா ஹிக்ஸ்,'நேருவுக்கும், என் தாயார் எட்வினாவுக்கும் காதல் இருந்தது உண்மை தான். ஆனால், நேரு மிகச் சிறந்த மனிதர்; அவர்களுக்குள் எந்த தவறும் நடக்கவில்லை...' என, தன் மலரும் நினைவுகளை, பகிர்ந்துள்ளார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !